Sunday, January 27, 2008

என்ன சாப்பிடீங்க ?

வணக்கம்! வந்தனம்! நமஷ்கார்!
நா எழுதபோற விஷயங்களுக்கு ஆதரவு குடுக்கவும் ஆப்பு வைக்கவும் நிறைய பேரு காத்திருக்கீங்கன்னு தெரியுது. எதுவா இருந்தாலும் அதுல பாதி என் அண்ணனுக்கு போய் சேரும்கிற நிம்மதில ஆரம்பிக்கிறேன்..

ஒன்னும் இல்லீங்க... போன வாரம் ஷாலினி விழிப்புணர்வு வாரம்... நா வந்துட்டேன்.. இனி நீங்க தத்துவ மழையில நனைய போறீங்க என்ற மெசேஜ் உங்களுக்கு கெடச்சிருக்கும்.. இந்த வாரம் புற்றுநோய் (cancer) விழிப்புணர்வு வாரம் ...ஆமாங்க...


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்...

( நோய் என்ன ? நோய்க்கான காரணம் என்ன ? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.- கலைஞர் உரை)
வள்ளுவர் 2 அடில சொல்லிடாரு... நா இதையே தான் வழ வழா கொழ கொழா னு சொல்ல போறேன்.. கேளுங்க..


சந்தோஷமா எல்லாரும் இருக்கனும்னு யோசிக்கிறோம்...மனசளவில மட்டும் இருந்தா போதுமா????? இல்லீங்க நம்ப உடம்பு அரோக்யமா இருந்தா தான் மனசும் அரோக்யமா சந்தோஷமா இருக்க முடியும்.. இது மறுக்க முடியாத உண்மை.

நம்ப நிறைய பேரு சாப்பிடுற விஷயத்துல அக்கறை கம்மியா காமிக்கிறோம். வேலை, படிப்பு, நண்பர்கள், அரட்டை, பொழுதுபோக்கு இப்படி நிறைய விஷயம் இருப்பதால சைடுல அது பாட்டுக்கு கிடைக்குறத சாப்பிட்டு காலத்த ஓட்டுறோம்..

இந்த பதிவை என் நெருங்கிய நண்பர்கள் பாத்தா ஷாலினியா அரோக்ய உணவு பத்தி பேசுறானு ஆச்சர்யபடுவாங்க..

அத ஏன் கேட்குறீங்க... ஒரு பழம் சாப்பிட்டுட்டு லஞ்ச் முடிஞ்சுதுனு நான் சொல்வேன்.. என் அண்ணன் cappucino குடிச்சுட்டு டின்னர் முடிஞ்சுதுனு சொல்வார்.. எல்லாம் ஒரே குட்டைல ஊரின மட்டை தான்.. :P

ஒழுங்க நல்லா உணவு சாப்பிடாததால வர நோய்கள் பல, அதுல தீர்க்க முடியாத நோய்கள்ல ஒன்னு கேன்சர்(cancer).

எனக்கு தெரிஞ்ச சில பேரு இது மாதிரி பாதிக்க பட்டதால தான் இத சொல்லலாம்னு பாத்தேன்..
ஒரே ராத்திரில நம்ப பழக்கங்கள மாத்திக்க முடியாதுதான்.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணி சாப்டுற விஷயம்ல நல்ல பழக்கம் கொண்டு வரலாம்..


அடிப்படையா 5 சுலபமான குறிப்புகள் சொல்றேன்.. முடிஞ்ச வரை பின்பற்ற முயற்சியுங்க..1. தினமும் நிறைய காய்கறி பழங்கள் சாப்பிடுங்க ( atleast 5 portions of fruits or vegetables a day)

2. நிறைய தண்ணீர் குடிங்க, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் அல்லது சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள் (artificial fizzy and carbonated drinks) தவிர்க்க முயற்சி பண்ணுங்க. பழமெல்லாம் சாறு பண்ணி குடிப்பதை விட அப்படியே சாப்பிடுறது தான் நல்லது. அப்போ தான் vitamins முழுமையா கெடைக்கும்.

3. தினமும் ஒரு அரைமணி நேரமாவது உடற்பயிற்சிக்கு உங்க நேரத்தை ஒதுகுங்க. சுலபான உடற்பயிற்சிகள் நிறைய இருக்கு (jogging, walking, swimming, cycling)

4. தினமும் மூன்று வேளையும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ சாப்பிடாதீங்க.

5. முடிஞ்ச வரை செயற்கை தின்பண்டங்களை தவிர்த்து இயற்கை உணவுகளை சாப்பிட்டு பழகுங்கள்(carrot sticks, raisins,strawberries,sunflower seeds,cucumber,corn,fruit salad)

மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்...

http://healthlink.mcw.edu/article/1031002628.html


இது organic உணவு பற்றிய இணைப்பு..
http://news.bbc.co.uk/1/hi/health/145347.stm

வல்லுனர்கள் இதை பற்றி என்ன சொல்கின்றார்கள்??
http://www.organicfoodee.com/sense/betterforyou.html

'Prevention is better than cure' but cure இல்லாத கேன்சர் மாறி வியாதிகளுக்கு 'Prevention is the only cure' .

நான் முன்ன சொன்ன மாதிரி சாக போற நாள் எப்போனு தெரிஞ்ச இப்படி வாழ மாட்டோம்.. அதே மாறி கேன்சர் வரும்பொழுது அதுவும் ஒழுங்கான உணவு சாப்பிடாததினாலன்னு தெரிஞ்சா நம்ப இப்படி சாப்டமாடோம்...

உணர்வோம்.. எல்லோரும் சந்தோஷமாக வாழ்வோம்!!

மீண்டும்,
ஷாலினி!!!

40 comments:

CVR said...

////எதுவா இருந்தாலும் அதுல பாதி என் அண்ணனுக்கு போய் சேரும்கிற நிம்மதில ஆரம்பிக்கிறேன்..////
நல்ல எண்ணம்!! :-P


//நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்...///
அட அட!! குறள் எல்லாம் போட்டு தாக்குறீங்க!! ;)

///அத ஏன் கேட்குறீங்க... ஒரு பழம் சாப்பிட்டுட்டு லஞ்ச் முடிஞ்சுதுனு நான் சொல்வேன்.. என் அண்ணன் cappucino குடிச்சுட்டு டின்னர் முடிஞ்சுதுனு சொல்வார்.. எல்லாம் ஒரே குட்டைல ஊரின மட்டை தான்.. :P////
நல்லதொரு குடும்பம்,பல்கலைகழகம்!!

cappucino எல்லாம் ஒரு உணவா அப்படின்னு கேட்டா, வயிற்றை நிறப்புறது எல்லாமே உணவுதான்னு தெனாவட்டா சொன்னாராமே?? :-P

//'Prevention is better than cure' but cure இல்லாத கேன்சர் மாறி வியாதிகளுக்கு 'Prevention is the only cure' .///
makes sense!!

நிறைய குறிப்புகளோட நல்ல உபயோகமான பதிவு மேடம்!!
வாழ்த்துக்கள்!!

மேலும் இது மாதிரி நிறைய பதிவுகள் போட்டு கலக்குங்க!! B-)

Dreamzz said...

//////எதுவா இருந்தாலும் அதுல பாதி என் அண்ணனுக்கு போய் சேரும்கிற நிம்மதில ஆரம்பிக்கிறேன்..////
நல்ல எண்ணம்!! :-P//

ரிப்பீட்டு!

Dreamzz said...

ஆஹா! நல்ல உபயோகமான பதிவா போட்டுடீங்க... இப்ப என்ன சொல்ல வறீங்க.. நிறைய பழம் சாப்பிடனும்னா? :)

Divya said...

Hi Shalini!
ரொம்ப உபயோகமான தகவல்களுடன் ஒரு பதிவு!

\\முடிஞ்ச வரை செயற்கை தின்பண்டங்களை தவிர்த்து இயற்கை உணவுகளை சாப்பிட்டு பழகுங்கள்(carrot sticks, raisins,strawberries,sunflower seeds,cucumber,corn,fruit salad)\

bracket la healthy snack items koduthathirku romba nandri shalini!

இது மாதிரி நல்ல நல்ல தகவல்களை உங்கள் பதிவுகளில் எதிர்பார்க்கிறேன்!

G3 said...

//நம்ப நிறைய பேரு சாப்பிடுற விஷயத்துல அக்கறை கம்மியா காமிக்கிறோம். //

நிச்சயமா நான் அந்த லிஸ்ட்ல இல்ல இல்ல இல்ல :P

G3 said...

சரி என்னென்ன சாப்பிடனும்னு சொல்லிட்டீங்க.. எப்போ அதெல்லாம் வாங்கித்தரப்போறீங்க??? ;)

ambi said...

நல்ல உபயோகமான பதிவா போட்டுடீங்க! kudos.

டாக்டர் ஷாலினி வாழ்க. :)

(போன பதிவுல, என் கமண்ட் பப்ளிஷே ஆகலை. Grrrrrr)

//நிச்சயமா நான் அந்த லிஸ்ட்ல இல்ல இல்ல இல்ல //

@G3 akka, ஹிஹி, அது எங்களுக்கே தெரியும். சாட்சி சொல்ல கில்ஸ், பில்லு பரணி ஷ்யாம், வேதா எல்லாரும் வருவாங்க. :))

Arunkumar said...

post dedicated to g3-nu poduveenga-nu expect pannen.. hehe :P

Arunkumar said...

////எதுவா இருந்தாலும் அதுல பாதி என் அண்ணனுக்கு போய் சேரும்கிற நிம்மதில ஆரம்பிக்கிறேன்..////

annan vaangura aapula paadhi ungalukku kudukkalaama? :)

Arunkumar said...

//
@G3 akka, ஹிஹி, அது எங்களுக்கே தெரியும். சாட்சி சொல்ல கில்ஸ், பில்லு பரணி ஷ்யாம், வேதா எல்லாரும் வருவாங்க. :))
//

konja naal naan oorula illa adhukkaga ennoda pera marandhudradha? annanukku idhu thaan azhaga? ennamo ponga.. kalyaanam aanadhula irundhu maradhi jaasthi aagiduchu ungalukku :P

My days(Gops) said...

//வணக்கம்! வந்தனம்!//
என் நெற்றியில் இல்லை சந்தனம்...

//"என்ன சாப்பிடீங்க ?"//
நல்லா இருக்கியா'னு நாலாயிரம் பேரு கேட்ப்பாங்க.ஆனா சாப்பிட்டியா'னு வெறும் நாலு பேரு தான் கேட்ப்பாங்க.. அந்த கட்சியில நீங்களும் இருக்கீங்க... குட் குட்..


//இனி நீங்க தத்துவ மழையில நனைய போறீங்க என்ற மெசேஜ் உங்களுக்கு கெடச்சிருக்கும்.. //
raincoat போட்டு இருக்கேன்... ஒகே தானே?


//நா இதையே தான் வழ வழா கொழ கொழா னு சொல்ல போறேன்//
பொங்கல் effect ah?

My days(Gops) said...

//நம்ப உடம்பு அரோக்யமா இருந்தா தான் மனசும் அரோக்யமா சந்தோஷமா இருக்க முடியும்.. இது மறுக்க முடியாத உண்மை.//
ஆமாங்க Health is Wealth :P


//எல்லோரும் சந்தோஷமாக வாழ்வோம்!//

கண்டிப்பா....

ஆமா நீங்க ஒரு டாக்டரா?

கோபிநாத் said...

நல்ல பதிவு ;)

\\G3 said...
சரி என்னென்ன சாப்பிடனும்னு சொல்லிட்டீங்க.. எப்போ அதெல்லாம் வாங்கித்தரப்போறீங்க??? ;)\\

அதானே பார்த்தேன்.. இந்த மாதிரி பதிவில் இப்படி ஒரு பின்னூட்டம் கண்டிப்பாக இருக்கும் ;))

ஷாலினி said...

@cvr

////எதுவா இருந்தாலும் அதுல பாதி என் அண்ணனுக்கு போய் சேரும்கிற நிம்மதில ஆரம்பிக்கிறேன்..////

//நல்ல எண்ணம்!! :-P//

பரம்பரை பரம்பரையா இந்த நல்ல எண்ணம் எங்க குடும்பத்துல எல்லார்க்கும் தானா வருது :P

//அட அட!! குறள் எல்லாம் போட்டு தாக்குறீங்க!! ;)//

திருவள்ளுவர் எழுதி தாக்கினார்... நா வெறும் காபி பேஸ்ட் பண்ணி தாக்கி இருக்கேன்..ஹிஹி

//cappucino எல்லாம் ஒரு உணவா அப்படின்னு கேட்டா, வயிற்றை நிறப்புறது எல்லாமே உணவுதான்னு தெனாவட்டா சொன்னாராமே?? :-P//

என் அண்ணனாவது தெனாவட்டா பதில் சொல்றதாவது.. இல்லவே இலையே ;)

//நிறைய குறிப்புகளோட நல்ல உபயோகமான பதிவு மேடம்!!
வாழ்த்துக்கள்!!//

நன்றி CVR!! :)

//மேலும் இது மாதிரி நிறைய பதிவுகள் போட்டு கலக்குங்க!! B-)//

அதுக்கு தானே வந்திருக்கேன்.. எல்லாரோட அதரவோட கண்டிப்பா கலக்கலாம்!!

ஷாலினி said...

@dreamzz

//ஆஹா! நல்ல உபயோகமான பதிவா போட்டுடீங்க...//

நன்றி!!

//இப்ப என்ன சொல்ல வறீங்க.. நிறைய பழம் சாப்பிடனும்னா?//

நீங்க சொன்னத செய்யமாடீன்ன்கன்னு எனக்கு தெரியும்... பழம்+காய்கறி இதெல்லாம் சாப்புடாதீங்க..போதுமா? :P

ஷாலினி said...

@divya

//ரொம்ப உபயோகமான தகவல்களுடன் ஒரு பதிவு!//

நன்றி திவ்யா!! :)

//இது மாதிரி நல்ல நல்ல தகவல்களை உங்கள் பதிவுகளில் எதிர்பார்க்கிறேன்!//

கண்டிப்பா!! :)

ஷாலினி said...

@g3

//சரி என்னென்ன சாப்பிடனும்னு சொல்லிட்டீங்க.. எப்போ அதெல்லாம் வாங்கித்தரப்போறீங்க??? ;)//

கையில காசு வாயில தோசை..ஹிஹி

ஷாலினி said...

@ambi

//நல்ல உபயோகமான பதிவா போட்டுடீங்க! kudos//

நன்றி!!

//டாக்டர் ஷாலினி வாழ்க//

அடடா... இப்படி உடல் நலம் பற்றி பதிவு போட்டா டாக்டர் ஆகலாம்னு தெரிஞ்சிருந்தா எப்பவோ போட்டிருப்பேனே :P

ஷாலினி said...

@arunkumar

//annan vaangura aapula paadhi ungalukku kudukkalaama?//

intha deal enaku pidikalayee..vena:P

ஷாலினி said...

@my days(gops)

//நல்லா இருக்கியா'னு நாலாயிரம் பேரு கேட்ப்பாங்க.ஆனா சாப்பிட்டியா'னு வெறும் நாலு பேரு தான் கேட்ப்பாங்க.. அந்த கட்சியில நீங்களும் இருக்கீங்க... குட் குட்..//

இதுக்கு கூட கட்சி வச்சிருகீங்களா???
சூப்பர்!!

//raincoat போட்டு இருக்கேன்... ஒகே தானே?//

அதெல்லாம் ஓகே தான்.. ஜலதோஷம் பிடிகாம இருந்தா சரி..ஹிஹி

//ஆமாங்க Health is Wealth//

egjactly!! :)

//ஆமா நீங்க ஒரு டாக்டரா?//

ஏனுங்க இந்த சந்தேகம்?? :-S

ஷாலினி said...

@ கோபிநாத்..

//நல்ல பதிவு ;)//

நன்றி!! :)

ஷாலினி said...

@my days(gops)

//நல்லா இருக்கியா'னு நாலாயிரம் பேரு கேட்ப்பாங்க.ஆனா சாப்பிட்டியா'னு வெறும் நாலு பேரு தான் கேட்ப்பாங்க.. அந்த கட்சியில நீங்களும் இருக்கீங்க...//

சாப்பிட்டியா'னு நாலு பேரு கேட்ப்பாங்க.. ஆனா என்ன சாப்பிடீங்க'னு ஒருத்தர் தான் கேட்ப்பாங்க.. அந்த ஒருத்தி தான் நா!! :)

My days(Gops) said...

//ஆனா என்ன சாப்பிடீங்க'னு ஒருத்தர் தான் கேட்ப்பாங்க.. அந்த ஒருத்தி தான் நா!! :)//

ஆமாங்க நீங்க ஒருத்தி தான் அப்படி கேட்பீங்க :P

"சாப்பிட்டீங்களா? => இது முதல் கேள்வி..

என்ன சாப்பிட்டீங்க? => இது இரெண்டாவது கேள்வி.... :)

எது எப்படியோ, பதில் ஒன்னு தானே :P

ஷாலினி said...

@my days(gops)

//சாப்பிட்டீங்களா? => இது முதல் கேள்வி..

என்ன சாப்பிட்டீங்க? => இது இரெண்டாவது கேள்வி.... :)

எது எப்படியோ, பதில் ஒன்னு தானே :P//

1 கு பதில் 'சாபிட்டேன்'..
2 கு பதில் 'இட்லி சாபிட்டேன்'..

எப்படி ரெண்டும் ஒன்னு ?? :-S

My days(Gops) said...

//'சாபிட்டேன்'..
2 கு பதில் 'இட்லி சாபிட்டேன்'//

nalla paarunga rendumay saapiten la thaaan mudiudhu...:P

ஷாலினி said...

@My days(Gops)

//nalla paarunga rendumay saapiten la thaaan mudiudhu//

mudiyurathu munnadi etha irunthaalum..mudiyurathuku munnadi ethuvum illanalum... mudiyura varthai onnu'ndrathaala..rendum orey arthama aagathu.;)

for eg,iruken....
sogama iruken...

rendum 'iruken' nu mudiyuthu..aana rendukum arhtham vera :P

My days(Gops) said...

//mudiyura varthai onnu'ndrathaala..rendum orey arthama aagathu.;)//


i knw.. bt sumtimes it depends on the situation illai ah?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எதுவா இருந்தாலும் அதுல பாதி என் அண்ணனுக்கு போய் சேரும்கிற நிம்மதில ஆரம்பிக்கிறேன்..//

நீங்க பெற்ற இன்பம் இவ்வையகம் ப்பெறுக பாலிஸியா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

// தினமும் நிறைய காய்கறி பழங்கள் சாப்பிடுங்க//

ஆஹா.. ஆப்பு ரெடி. :::P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நிறைய தண்ணீர் குடிங்க//

இது தினமும் பண்றதுதான்..

//தினமும் ஒரு அரைமணி நேரமாவது உடற்பயிற்சிக்கு உங்க நேரத்தை ஒதுகுங்க.//

உடபயிற்சிதானே? தினமும் 8 மணி தூங்குற உடற்பயிற்சி செய்யுறேன்.அது ஓக்கேவ்வா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மீண்டும்,
ஷாலினி!!!//

அடுத்து மீண்டும் மீண்டும் ஷாலினியா? ;-)

G3 said...

//கையில காசு வாயில தோசை//

enakku neenga ooti ellam vida venaam. platela kudutha podhum.. naanae saaptuppen :P

SanJai said...

//நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்...//

ஹைக்கூ ரொம்ப நல்லா இருக்கெ. நீங்க எழுதினதா? :P

உபயோகமான பதிவு. இன்னும் நெறய எழுதுங்க.:)

ஷாலினி said...

@My days(Gops) said...

//i knw.. bt sumtimes it depends on the situation illai ah?//

kandipa it depends on the situation. vothukuren Gops :)

ஷாலினி said...

@.:: மை ஃபிரண்ட் ::. said...

//நீங்க பெற்ற இன்பம் இவ்வையகம் ப்பெறுக பாலிஸியா? ;-)//

அதே..அதே..

//உடபயிற்சிதானே? தினமும் 8 மணி தூங்குற உடற்பயிற்சி செய்யுறேன்.அது ஓக்கேவ்வா//

தூங்கும்போது கனவுல செஞ்சா சரி ;)

ஷாலினி said...

@g3

//enakku neenga ooti ellam vida venaam. platela kudutha podhum.. naanae saaptuppen :P//

oh ungaluku plate la pota sapda theriyuma...neenga kozhanthai nu nenachu cholliten..hehe

ஷாலினி said...

@sanjai
//நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்...

ஹைக்கூ ரொம்ப நல்லா இருக்கெ. நீங்க எழுதினதா? :P

உபயோகமான பதிவு. இன்னும் நெறய எழுதுங்க.:)//

பதிவுல நா தான் எழுதினேன் ;) அத தானே கேட்டீங்க ;)

நன்றி Sanjai :)

SanJai said...

//பதிவுல நா தான் எழுதினேன் ;) அத தானே கேட்டீங்க ;) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((((

cdk said...

மிகவும் பயனுள்ள பதிவு! நல்லா வெரைட்டியா எழுதிறீங்க! மேலும் கலக்க வாழ்த்துக்கள்!

எனக்கு ஒரு சந்தேகம்! சமைக்கும் போது கடுகு உபயோகிப்பதால கேன்சர் வருதுன்னு கேள்வி பட்டிருக்கேன்! உண்மையா?

ஷாலினி said...

@cdk

//மிகவும் பயனுள்ள பதிவு! நல்லா வெரைட்டியா எழுதிறீங்க! மேலும் கலக்க வாழ்த்துக்கள்! //

நன்றி cdk !

//எனக்கு ஒரு சந்தேகம்! சமைக்கும் போது கடுகு உபயோகிப்பதால கேன்சர் வருதுன்னு கேள்வி பட்டிருக்கேன்! உண்மையா?//

நான் google-ல தான் தேடி பாத்தேன். கடுகு உபயோகிக்கறது நல்லதுன்னு போட்டிருக்கு. கடுகுக்கு anti-cancer effect இருக்குன்னு சொல்றாங்க :)