Friday, July 10, 2009

இதயத்திற்கு இதமான இசை இதோ!





புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

(புத்தம் புது காலை)

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்

(புத்தம் புது காலை)

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது

(புத்தம் புது காலை)

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

இந்த பாட்டை சமீபத்தில் கேட்டதிலிருந்து என் உதடு இதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.. ஏன் என்று என்னை கேட்டேன்.. பதில்... Words fail me! :)

This song is not just like any other IR song, it has a speciality.. அது என்ன என்று ராகவன் அண்ணா கிட்ட கேட்டப்ப அவர் சொன்ன பதில் இதோ : this song was composed for alaigal oyvathillai. but the song wasnt picturised. still... it stays in our heart. thatz the wonder of this song. :)

புது பாடல்கள் கேட்டுட்டு இருக்கும்போது இடையில் இது போல பாடல்களை கேட்கும்போது ..மனசு சொல்றது இது தான்...always old is gold! :)

I dedicate this song to all my loved ones including u who is just listening to this fantastic song.

Let everyday be a புத்தம் புது காலை! :)

Tata..

ஷாலினி

Saturday, May 23, 2009

தேவதையை கண்டேன்!

சிறகு முளைக்கா தேவதைகள் எத்தனையோ நடந்திருக்க..
சிறகு முளைத்த மனதுக்கெல்லாம் தேவதை நீயடி!








முத்தாய்ப்பாய் எழுதிடும் மத்தாப்பு திவ்யாக்கு எங்கள் பிறந்து நாள் வாழ்த்துக்கள்!


We all Love u! ;) Be Happy and Keep Smiling :)

Shaalu and friends



Monday, January 26, 2009

காதல் வாழ்க!




மௌனம் அழகு தான்..
நீ என் அருகில் இருக்கும் வரை!




கண் இமைகளும் சுமை தான்..
விழித்ததும் உன்னை காணும் வரை!





தனிமை இனிமை தான்..
என் மனதில் நீ வசிக்கும் வரை!






கண்ணீரும் சுகம் தான்..
நீ என்னை பிரியாத வரை!




பெண்மை மென்மை தான்..
உன் கைகள் என்னை தீண்டும் வரை!





கனவுகள் தொல்லை தான்..
நீ அதில் வராத வரை!







என் உயிரும் எனது தான்..
நம் காதல் வாழும் வரை!

Tuesday, December 30, 2008

Goodbye 2008! :)


Hi Friends,

இதுல வர்ற கேரக்டர்ஸ் எதுக்கும் பேரு ஊரெல்லாம் சொல்லலை... ஆனா படிக்கறவங்களுக்கு தானா புரியும்.


If u know me and then u will know what I mean :)


2008 முழுவதும் பல மாற்றங்கள்...

ஏமாற்றம்,
தடுமாற்றம்,
மனமாற்றம்,
இடம் மாற்றம்.

புது நண்பர்கள்.. புதிரான வாழ்க்கை.
புரியாத நட்பு.. புரிந்ததால் பிரிந்த உறவு.

ரகசிய சிநேகிதம்.

குழப்பங்கள் எவ்வளவு இருந்ததோ அதே அளவு கும்மாலமும் :D

ஏகப்பட்ட புது அனுபவங்கள்.

கடவுளோட தரிசனத்துக்காக ஏங்கிட்டு இருக்கற பக்தர்கள் போலவே நானும் வாழ்க்கைல almost impossible- ஆன விஷயம் நடக்கனும்னு ஏங்கிட்டு இருந்தேன்..

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு அடிக்கடி என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன். ஒரு விஷயம் ஆசைப்பட்டு அது நடக்கனும்னா விடாம அடைய முயற்சி பண்ணிட்டே இருக்கனும். அப்போ தான் அது நமக்கு கிடைக்கும். Recently என் smart அண்ணன் recommend பண்ணி 'The secret' னு ஒரு புக் படிச்சேன். I take this moment to thank him for that.. because அவ்ளோ encouraging புக் அது. வாழ்க்கைல உனக்கு இது கிடைக்கனும்னு நீ நினைச்சா.. கண்டிப்பா அது உனக்கு கிடைக்கும்னு உசுப்பேத்தி விட்ட புக் :)

என் அனுபவம்ல சொல்றேன். I got what I want.. and I am confident that I will get if I want :)

என்ன விஷயம்.. எப்படிப் பட்ட விஷயம், நல்லதா, கெட்டதா இதெல்லாம் முக்கியம் இல்லை.. if u are happy and if by u being happy if others are happy and as long as it does not affect anyone personally...Just Go for it!!!

என் குருவான கோபிநாத் சச்சிதானந்த சுவாமிகள் அடிக்கடி சொல்றது தான் நானும் இங்க சொல்லிக்க விரும்பறேன்.. "போன பஸ்ஸுக்கு கை காமிச்சு பிரயோஜனம் இல்லை" :)

2008 உங்க எல்லாருக்கும் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை.. let 2009 be Yours!


If you want something you never had, do something you have never done...

Don't go the way life takes you.
Take the life the way you go .
And remember you are born to live and
not living because you are born.


Forgettable events beginning of the year நடந்திருந்தாலும்.. unforgettable events end of the year நடந்தது.. which means life goes on no matter what... life-ல எதுவுமே நிரந்தரம் இல்லை.. "இதுவும் கடந்து போகும்" என்ற இந்த 3 வார்த்தைய எப்பவும் நியாபகம் வெச்சிக்கோங்க...


Everything in life is temporary coz everything changes!!!! :)


Say a Big Goodbye to 2008 and Open Hearted da welcome 2009.. எதுவா இருந்தாலும் ஒரு கை பாத்துரலாம் :)

Happy New year to all!
Have a Great Year ahead!

உங்கள்,
ஷாலினி.

Monday, September 22, 2008

பஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 2


ஹாய் பிரண்ட்ஸ்..

சொந்த செலவுல சூனியம் னா என்னனு தெரியுமா? g3 தவிர வேற யாருக்கு எல்லாம் தெரியலையோ கைய தூக்குங்க.. 1..2... ம்ம்ம்.. இதை படிக்குற நாலு பேருல ரெண்டு பேருக்கு என்னனு தெரியாதுனால let me explain....

உங்களுக்கு சொந்தமான இந்த பொன்னான நேரத்தை என் மொக்கை போஸ்ட் படிக்க செலவு பண்றீங்க பாருங்க.. இது தான் அர்த்தம்..

p.s g3 மட்டும் ஏன் டீல்ல விட்டேன்னு அவ கிட்ட தயவு செஞ்சி கேட்டுராதீங்க..:P

பஞ்ச் பண்ணி பல மாசம் ஆச்சு.. டச் வுட்டு போனதால திஸ் டைம் என் பஞ்ச் கொஞ்சம் சாப்டா இருக்கும்.. அட்ஜஸ்ட் கரோ... ;)


here I Go... புலிக்கு பசிச்சாலும் புல்லை திங்காது.. சரி.. சரி.. இது தெரிஞ்ச விஷயம் தான், but புலிக்கு பசிச்சாலும் பேப்பரை திங்காது.. இது தெரியுமா? தெரியாதுல்ல.. இன்னொரு விஷயம்.. புலிக்கு பசிகாட்டியும் இந்த இரண்டையும் திங்காது.. பிகாஸ் புலி பசிகாம தின்னாது.. மண்டைக்குள்ள போச்சா சொன்னது?
நல்லது...



ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்து ஆகாது.. ரைட் தான்.. but ஊர் குருவி உயரமா பறக்காட்டியும் பருந்து ஆகாது.. note this point.. இன்னொரு விஷயம்.. ஊர் குருவி பறக்காட்டியும் பருந்து ஆக முடியாது.. because it is a ஊர் குருவி.. அதுக்காக city குருவி பறந்தா பருந்து ஆகுமான்னு எல்லாம் கேட்டா நான் டென்சன் ஆயிருவேன்.. இன்னொன்னு சொல்றேன்.. நல்லா கேட்டுகோங்க.. விஜய் குருவி ஆகலாம்.. ஆனா, குருவி விஜய் ஆகமுடியாது.. விளங்குச்சா? இல்லை இன்னும் விளக்கனுமா?


காற்றுள்ள போதே தூற்றிகொள்.. அது சரி.. கைல மேட்டர் வச்சிக்கிட்டு காத்துக்கு வெய்ட் பண்ணா வயசு ஆயிடும்.. இல்ல காத்து வரப்ப கைல மேட்டர் இல்லேனாலும் வெளங்கிடும் .. சோ, நான் என்ன சொல்ல வரேன்னா.. கைல மேட்டர் வந்த உடனே.. மொதல்ல போய் ஒரு fan வாங்கணும் (இல்லாதவங்களை சொன்னேன்) எப்போ எல்லாம் காத்து வேணுமோ அப்போ எல்லாம் ஆன் பண்ணுங்க.. சிம்பிள் மேட்டர்.. ஒகே.. அப்போ காத்து வாங்கும் போது கைல மேட்டர் இல்லேனா என்னே பன்றதுன்னு யோசிக்கலாம்.. அதுக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கேன்.. மேட்டரை ரெடி பண்ணுங்க.. அம்புட்டுதான்... :P


கந்தை ஆனாலும் கசக்கி கட்டு.. குட் பாயின்ட்.. பிகாஸ், அயர்ன் பண்ற வேலை மிச்சம்.... அதுக்காக இந்டர்வியூ போகும் போது , வேலைக்கு போகும் போது இந்த பாலிஸிய பாலோவ் பண்ணுவேன்னு அடம்பிடிக்க கூடாது.. அந்த மாதிரி நேரத்துல கந்தை கசக்கி இருந்தாலும் அயர்ன் பண்ணி கட்டுன்னு மாத்திக்கணும்.. ;)


காப்பி பேஸ்ட் ஷாலினி னு பேரு வந்துற கூடாதுனு சொந்தமா ஒரு பழமொழி.. எஸ்.. எஸ்.. சொந்த சரக்கு தான்..


கடலைய கம்மியா போடணும்..மொக்கைய முழுசா போடணும்..
பிகாஸ்.. கடலைய நிறைய போட்டா வயிறுக்கு நல்லது இல்ல.. மொக்கைய கம்மியா போட்டா வாழ்க்கைக்கு நல்லது இல்ல.. ச்சே.. ஷாலினி நீ எங்கயோ இருக்க வேண்டிய ஆளுன்னு வுச்சு கொட்றது எனக்கு கேக்குது.. இட்ஸ் ஓகே.. நோ ஹார்டு பீலிங்க்ஸ்..

சொன்ன எல்லா தத்துவத்தையும் தத்து எடுத்து பாலோவ் பண்ணுங்க.. ரொம்ப நல்லா உருப்பட்ருவீங்க.. சந்தோசமா இருங்க... லைப்பை என்ஜோய் பண்ணுங்க.. வரட்டா..

அய்யோ.. அய்யோ.. என்ன இது, என்னவோ என்கிட்டே கடன் வாங்கின மாரி வட்டியும் முதலுமா ரியல் பஞ்சை போட்டி போட்டு திருப்பி தரீங்க.. பன்சர் ஆயிருவேன் போல இருக்கே..


This is my 13th post! I specially dedicate this to my Guru Gops! :)

நா எஸ்கேப் டா சாமி..

Monday, September 01, 2008

பூவுக்கு பிறந்த நாள் :)

Hi Friends, எப்படி இருக்கீங்க? இதயம் பேசுகிறேன்னு சொல்லிட்டு இப்படி heart beat நின்ன மாறி silent ஆகராலே னு யாரும் யோசிச்சிருக்க மாட்டீங்க.. இருந்தாலும் reason சொல்லாட்டி என் தலை வெடிச்சுரும்.....

தலைவர் அன்னிக்கு சொன்ன மாறி.. நேற்று போல் இன்று இல்லை.. இன்று போல் நாளை இல்லை.. வேறே ஒன்னும் நான் சொல்றதுக்கு இல்லை.. :P


இன்னைக்கு என்னோட best friend பிறந்த நாள்... thought of sharing the peelings I have for her...so, அதோட விளைவு தான் நீங்க இப்போ படிக்க (படிச்சு முடிச்சுட்டு commentalaye என்ன அடிக்க) போறது.... :P


*cough* *cough* பொய் சொல்றவங்களுக்கு தண்ணி கூட கிடைக்காதுனு சொல்வாங்க....mmm..சரி, anything for my G3 ;)

Here I go....

என்றென்றும் புன்னகை முகத்தோடு...



எதையும் தாங்கும் இதயத்தோடு...







கேடியானாலும் innocent லூக்கோடு...









'வரும்போது பாத்துக்கலாம்' policyodu...







இவ formல இருந்தா மொக்கைகள் போடுவா சக்கைபோடு..











இவ கூட இருக்கும் ஒவ்வொரு நொடியும் கழியும் சந்தோஷத்தோடு..







இவள் பேச்சு தேன் சுரக்கும் கூடு..






தினமும் என் நாள் துவங்கும் இவள் GM sms sodu..







இவ தான் நம்ப ஆளு..

..G3 என்ற பெயரோடு எல்லோர் மனதிலும் அன்போடு வளம் வரும் ஒரு அழகிய பூக்காடு.










அப்படி போடு.. இப்படி போடு..g3 பிறந்த நாளான இன்று..
சத்தமா ஒரு 'ஓ' போடு !

Many More Happy Returns of the Day my chweeeeeeeeeet girl. :)


என்னடி கன்னத்துல கைய வச்சுட்டு லுக்கு விடுற..இதுக்கெல்லாம் வேர ஆள பாரு ;) உ....உ...ஊது மா என் 3gms தங்கமே! :)




wait a Jecondu...... make a wish and blow the candles... :)




கொக்கா!!!!!!! மக்க!!!!! wisho-o-wishu போல ;)



g3 cake-க ஊதியே காலி பண்றதுக்கு முன்னாடி யாரவது அவள அமுக்குங்க.. நம்ப cake-க அமுக்கலாம் :P



Have a Fabulous day! May ur wishes come true in the coming years and have a great year ahead! :)




வாழ்வின் திசை மாறும், பாதைகளும் மாறும்.
சொந்தம் நூறு வரும், வந்து வந்து போகும்.
என்றும் என்றென்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே......... (copy pasted from some song) Dedicated to My G3...:)







Shalini...








Tuesday, May 27, 2008

இவர் தான் அந்த அவர்

சொல்ல போறேன்.. சொல்லிடறேன்.... சொல்லிட்டேன்.. :P

இது இவரோட சொந்த பஞ்ச் டயலாக் :P

நடிப்புல சிவாஜி..
படிப்புல ராஜாஜி..
சண்டைல நேதாஜி..
பாசத்துல மாதாஜி..
கண்டிப்புல பிதாஜி..
குறும்புல ஜுமாஞ்சி.. :P (இது மட்டும் என்னோட எக்ஸ்ட்ரா பிட்டிங்)
இவரு தான் நம்ம இராகவன் ஜி!!

மலரில் வாசனை போகலாம்
நிலவில் குளுமை போகலாம்
ஆனா உங்க மேல நாங்க வைச்சிருக்கும் பாசம் போகவே போகாது!
சூரியன் மேற்கே வரலாம்
சென்னைல ஸ்நோ வரலாம்
ஆனா நீங்க எங்க மேல வைச்சிருக்கிற நேசம் மாதிரி வரவே வராது! :P

இதுல மேல rhyming க kavidhai என்ற பேருல போட்டா எது வருதோ இல்லையோ மக்களுக்கு என் மெல கொல வெறி வரும்.. சோ வாழ்த்து சொல்லி me the escapeuuu ;)

Happy Birthday anna :)
Murugan arulaala enaikum neenga santhoshama vaazhanum nu ellar saarbulayum vaazhthuren :)
Enjoy and Keep Smiling :)
Shalini.