
மௌனம் அழகு தான்..
நீ என் அருகில் இருக்கும் வரை!

கண் இமைகளும் சுமை தான்..
விழித்ததும் உன்னை காணும் வரை!

தனிமை இனிமை தான்..
என் மனதில் நீ வசிக்கும் வரை!

கண்ணீரும் சுகம் தான்..
நீ என்னை பிரியாத வரை!

பெண்மை மென்மை தான்..
உன் கைகள் என்னை தீண்டும் வரை!

கனவுகள் தொல்லை தான்..
நீ அதில் வராத வரை!

என் உயிரும் எனது தான்..
நம் காதல் வாழும் வரை!