Friday, July 10, 2009
இதயத்திற்கு இதமான இசை இதோ!
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
(புத்தம் புது காலை)
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம் புது காலை)
வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது
(புத்தம் புது காலை)
படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
இந்த பாட்டை சமீபத்தில் கேட்டதிலிருந்து என் உதடு இதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.. ஏன் என்று என்னை கேட்டேன்.. பதில்... Words fail me! :)
This song is not just like any other IR song, it has a speciality.. அது என்ன என்று ராகவன் அண்ணா கிட்ட கேட்டப்ப அவர் சொன்ன பதில் இதோ : this song was composed for alaigal oyvathillai. but the song wasnt picturised. still... it stays in our heart. thatz the wonder of this song. :)
புது பாடல்கள் கேட்டுட்டு இருக்கும்போது இடையில் இது போல பாடல்களை கேட்கும்போது ..மனசு சொல்றது இது தான்...always old is gold! :)
I dedicate this song to all my loved ones including u who is just listening to this fantastic song.
Let everyday be a புத்தம் புது காலை! :)
Tata..
ஷாலினி
Subscribe to:
Posts (Atom)