
Hi friends, எப்படி இருக்கீங்க? என்ன ஆச்சு? சில பேரு மூஞ்சு உம்முனு இருக்கு (சாலமன் பாப்பையா மாதிரி படிக்கனும் இதை) அட நம்ம G3 ய பாருங்க.. எப்படி சிரிச்ச முகத்தோட படிக்கறாங்க.. சோக கவிதையா இருக்கட்டும், அறுவை ஜோக்கா இருக்கட்டும்.. எதுனாலும் மலர்ந்த தாமரை முகத்தோட படிப்பாங்க.. அவங்களை பார்த்து கத்துக்கோங்கய்யா:P
ஊர்க்கு உபதேசம் பன்னுறதுனா எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. அதுவும் சிக்கல் இருக்கிறவங்களுக்கு உபதேசம் பன்றதுனா சிக்கன் பிரியாணி மாதிரி..:P அவ்ளோ பிடிக்கும்...
சரி நேரா மேட்டர்க்கு வருவோம்... எதுனாலும் வேஸ்ட் பன்னலாம். ஆனா நேரம் மட்டும் வேஸ்ட் பன்னா திரும்ப அத சம்பாதிக்க முடியாது.. அதுனால இதோ short and sweet டா இன்னொரு பதிவு :)
1.வராத பஸ்ஸுக்கு வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
வர பஸ்ஸுக்கு வராத டைம்ல வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
வர பஸ்ஸுக்கு வருகிற டைம்ல வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
ஏன்னா.. என்னைக்கு பஸ் கரெக்ட் டைம்க்கு வந்து இருக்கு! :P
2.தலையில இருந்து முடி விழுந்தா வழுக்கை.
தூக்கம் வந்து விழுந்தா படுக்கை.
விநாயகர் மூக்கு பேரு தும்பிக்கை.
வாழ்க்கையில எப்பவும் வேணும் நம்பிக்கை :)
3.குப்பைய கூட்டினா பெருக்கல்.
உணவை கூட்டினா உடம்பு பெறுத்தல்.
வாழ்க்கையில கூட்ட கூடாத விஷயம் மத்தவங்க வெறுத்தல்.
ஆனா கூட்டிகிட்டே போக வேண்டிய விஷயம் சிரித்தல்!
4.தலைக்கு மேல இருக்கும் மூன்று விஷயம் எண்ண முடியாது..ஒன்னு நட்சத்திரம்.. இன்னொன்னு தலை முடி..(வழுக்கையா இருந்தாலும் :P) இன்னொன்னு தலை எழுத்து!!!
5.அதே போல மூன்று விஷயம் உணர மட்டும் தான் முடியும்.. பார்க்க முடியாது..
ஒன்னு கடவுள்.. இன்னொன்னு வலி... இன்னொன்னு காதல்..
கடவுளை உணராதவன் நாத்திகன்
வலியை உணராதவன் மாவீரன் (அட.. தலைவர் சொல்லி இருக்காருல... மனுஷனுக்கு தான் வலிக்கும்.. மாவீரனுக்கு வலிக்கவே வலிக்காதுனு!)
காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன் :P
அப்படினு சொல்லி... இந்த வார உரையாடலை இதோட நிறுத்திக்கிறேன்... இல்லாட்டி கல் மழை பெய்து அத வைச்சு வீடுகட்ட வேண்டியதா போயிடும் :P
வரட்டா! keep smiling and be happy :)
அன்றும் இன்றும் என்றும்,
உங்கள் ஷாலினி :)