
வெறுக்க நினைத்தால் வளர்கின்றது..
அழிக்க நினைத்தால் அணைக்கின்றது..
முறிக்க நினைத்தால் முளைக்கின்றது..
முடியவில்லையடா....

உன்னை விட்டு நான் விலகிவிடும் முன், நான் என்னை விட்டும் விலகிட வேண்டும்..
முதன் முறையாக மனம்
விடியா இரவை வேண்டுகின்றது!
விடை இல்லா கேள்வியைக் கேட்கின்றது!
நிலவைக் கண்டால் என் நினைவு உனக்கு வருவது போல்
நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் உன் நினைவு எனக்கு!
விலகவா?விட்டுவிடவா?
விடை சொல்வாயா?விடை பெறுவாயா?

ஒரே feelings of london na இருக்கா? ஹிஹி.. லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P
படிச்சுட்டு நீங்க எந்த விபரீத முடிவுக்கும் வர கூடாது.. நோ நோ...நா அப்பாவி. தெரியாம தெரியாதத பத்தி எழுதிட்டேன்.. ஷாலு பாவம் ல :)
forgive and forget!!! :)
ஷாலினி.