Friday, March 28, 2008

யாரது போறது?

அழகான தோற்றம்.
அமைதியான பேச்சு... *cough* *cough* eggjuice மீ ஹிஹி

Ok continue….

மொக்கையில் மன்னன்..
கடலையில் கண்ணன்..






பிகரா எறும்பு போனாலும் விடமாட்டாரு..
உடனே அதை படமாக்குவாரு..



ஆடினா டி.ஆர்..
நடந்தா NTR..
பாடினா ARR ..
எழுதினா பாரதியார் *cough**cough*




சே சே சே இந்த இருமல் தொல்லை வேற... உடம்பு சரி இல்லையா ஷாலுனு தான இப்போ கேட்டீங்க... இந்த இருமலுக்கு பின்னாடி ஒரு சோகக் கதையே இருக்கு... உடனே வாழ்வே மாயம் ரேஞ்சுக்கு கற்பனை பன்னிடாதீங்க... நானே சொல்லிடறேன்... என் சொந்த சோக கதைய..

Long long ago….not so very long ago…கவிதை எழுத கற்பனை செய்ய ஒரு மூங்கில் காட்டுகுள்ள நுழைந்தேன்... அப்போ தூரத்தில இருந்து ஓம்ம்ம்ம்.... ஓம்ம்ம்ம் னு ஒரு கனீர் க்குரல் கேட்டுச்சு... கிட்ட போக போக காஅட்து கிழியற மாதிரி ஆயிடுச்சு... காது வலிச்சுதால ஆஹ்ஹ்ஹ் னு கத்திட்டே கண்ணை மூடிட்டு காத பொத்தினேன்... அப்போ பார்த்து ஒரு குட்டி பூச்சி என் வாய்க்குள்ள போக நான் லொக்கு லொக்குனு இருமினேன்... அம்புட்டு தான்... ஒரே நிசப்தம்.... என்னனு பார்த்தா எதிர்ல முனிவர் வேஷம் போட்டு ஒருத்தர் நின்னுகிட்டு இருந்தாரு... வேஷம் காமடியா இருந்ததால கெக்க பெக்கனு சிரிச்சேன்.. உடனே அவர் கையில வைத்திருந்த அந்த கம்ப என் முன்னாடி காமிச்சு.. அடியே சண்டாளி என் தவத்தை கலைத்து விட்டாயே, இதோ உனக்கு சாபம் இடுகிறேன்னு தூய தமிழ்ல கதைச்சாரு. நான் சும்ம விடுவேனா... 'ஹலோ என்ன சவுண்ட் ஓவரா இருக்கு.. மூங்கில் காட்டுக்குள்ள முனிவர் வேஷம் போட்டுட்டு யார் யாருக்கு சாபம் விடுவது? இந்த ரீல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.. என் காது கிழிய வைச்சுட்டு வாய் கிழிய பேசுற பேச்ச பாரு' அப்படினு ரொம்ப சத்தமா சொன்னேன்..

அடுத்த வினாடி ஒரே புகை அவரை சுத்தி.. என் பேச்சு திறமையில அவரு வயிரு எரிந்து போச்சோனு நினைச்சேன்.. இல்லைங்கோ.. அவரு நிஜமாவே முனிவர் போல.. இவர் தவத்த கலைக்க எதிராளிகள் என்னை அனுப்பினதா தப்பா நினைச்சுட்டு 'பொய் சொல்லாதே இனிமே நீ பொய் சொன்னா உடனே உனக்கு என் தவத்தை கலைத்த அதே இருமல் வரும்'னு சாபம் விட்டுடார் :( sorrynga…so அப்போ அப்போ இருமல் நடுவில வரலாம் கண்டுகாதீங்க ப்ளீஸ் ; )

அட, let us continue....

ம்ம் எழுதின பா... வேணா.. அத விட்டுடுவோம்.. திரும்பி இருமல் வரும் :P

இவர் தாங்க நம்ம CVRரு... ஹிஹி



ஒன்னு சொல்ல விட்டுட்டேன் நடுவில..

இவரு பேசினா அடிக்காது போரு
இவரோட ஸ்கரேப் எண்ணிகை ஆறாயிரத்தி ஐநூறு ;)

4 நாளுல Ann Arbor விட்டு கிளம்பி போறாரு சென்னைக்கு
அதுனால நல்லப்படியா வழிஅனுப்பி வைப்போம் வாழ்த்துக்கள் சொல்லி இன்பமான வாழ்க்கைக்கு..

Safe Journey and Happy Life in Chennai CVR!!
Good Luck for you bright and colourful Future!!

God Bless U!


உங்கள் சேவை பதிவுலக மக்களுக்கு கண்டிப்பா தேவை. so dont stop writing.


Bye , Take Care and Keep in Touch!! :)

Thursday, March 13, 2008

லக்கி நம்(ண்)பர் 13!!

வணக்கம் வந்தனம் என் நெற்றியில இருக்கு சந்தனம்..
நான் சொல்ல போறது fulla சொல்லி முடிக்கிறவரைக்கும் எல்லாரும் சைலண்ட்டா குந்தனும்.. :)

என்ன சொன்ன உடனே ஏதோ பந்தி போட்ட மாதிரி உட்கார்ந்துடீங்களா?? :P அது சரி... வந்தாச்சு.. உட்கார்ந்தாச்சு.. விஷயத்துக்கு வறேன்.. Gops.. gops..னு (இரெண்டு பேர் இல்ல) ஒருத்தர் இருக்காராமே.. கேள்வி பட்டேன். அவரை பத்தி கொஞ்சம் உங்க கிட்ட விசாரிக்கனும்னு தான் கூப்ப்பிட்டேன். ஊருக்குள்ள யார்ட்டா கேட்டாலும் இப்படி சொல்லறாங்க..

இவரு பேசினா நான்-ஸ்டாப் FM..
இவரு தான் எங்க ஊர் நெக்ஸ்ட் PM.



இவரு முகத்துல முழிச்சா யோகம் வரும்...
வெயில் அடிச்சா ஆட்டொமேடிக்கா தாகம் வரும்.



இவர் கார் ஆகும் அப்பப்ப பஞ்சர்...
இவர் பேசினா நம்ம காதுக்கு வேணும் டிஞ்சர்.

இவரோட லக்கி நம்பர் பதிமூனு..
மேக்கு அடுத்த மாசம் ஜூனு.

ஐயோ ஐயோ. என்ன எங்க அடிக்க வறீங்க.. இதெல்லாம் ஊருக்குள்ள சொல்லறாங்க... யாரு அது..உங்க கூட்டத்துல ஒருத்தர் என்னை பலமா குத்தினது.. அதுவும் இது கோப்ஸ் குத்துனு சொல்லிட்டு குத்தினமாதிரி காதுல விழுந்தது..

ஆகா ஆகா.. வந்துடான்யா வந்துடான்யா.. இவரு தான் கோப்ஸ்ஆ?

வணக்கம் தலைவா..
எங்க போறீங்க விரைவா..
கேக்க வெட்டுங்க சம அளவா..
அத எடுத்து போய் எல்லாரும் சாப்பிடுங்க மன நிறைவா..



ஹிஹி..
உங்கள் மொக்கை சேவை உங்க அன்பு பதிவுலக மக்களுக்கு கண்டிப்பா தேவை..
so இன்று போல் என்றும் ROTFL ஆ உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கனும்னு இறைவனை வேண்டிக்கிறோம்..
எல்லார் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Tomorrow never dies and ur smile never lies..

சாப்பாடு தான் ஆச்சுல... போய் வேலைய பாருங்கப்பா!


ஆஹா.. யாரோ பாசக்கார பய சாப்பிட்டு மீதிய வைச்சுட்டு போய் இருக்கான்..
நமக்குனு வைச்சுட்டு போனானா, இல்லை அவனுக்கு அவசரம்பு வைச்சுட்டு ஓடிட்டானா??

oops.. இந்த கும்மாளத்துல நா oppice-sa மறந்துட்டேன்.. டாட்டா..catch u later! Byeeee :)

Sunday, March 02, 2008

படிங்க! குடிங்க! ;)

வந்துட்டேன்'ல..


அட வந்தா, பந்தா விட்டா, ரெண்டு போஸ்ட் போட்டா அப்பறம் ஆளையே காணுமேனு பாத்தீங்களா?? தெரியும் , பத்துல நாலு பேராவது என்னை மிஸ் பண்ணி இருப்பீங்க..ஹிஹி. சரி, emotional ஆகாதீங்க, அதான் வந்துட்டேன் ல.

எல்லாரும் பயனுள்ள பதிவா போடுங்கன்னு ஒரு நிபந்தனை விட்டதால என்னோட ஈமெயில்கு வந்த ஒரு உபயோகமான விஷயத்த உங்க கிட்ட பகிர்ந்துக்கலாம்னு பாத்தேன்.
முன்னுரை மட்டும் நான் சொல்றேன் மத்ததெல்லாம் தெளிவா அவங்களே சொல்லி இருக்காங்க.



எத்தன பேரு இங்க காலைல எழுந்ததும் atleast ஒரு கிளாஸ் தண்ணி அடிக்கிறீங்க sorry குடிக்கிறீங்க?(slip of the finger ra) இந்தியாவுல இருப்பவங்க வெயில் தாங்காம நிறைய தண்ணி குடிப்பீங்க ஆனா குளிர் தேசத்துல இருக்கற சில நண்பர்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறது இல்ல.. அதுல முதல் எடுத்துக்காட்டு நான் தான்.. 2-3 days கூட தண்ணியே குடிக்காம இருந்திருக்கேன்.. அப்பறம் ஞாபகம் வந்ததும் தண்ணியே இனி பாக்கவே முடியாதுங்கற ரேஞ்சுக்கு குடிப்பேன். இது மிகவும் தவறு.

அதுக்காக சும்மா ஞாபகம் வரும்போதெல்லாம் தண்ணிய குடிக்குறதும் தவறு. என்ன இந்த பொண்ணு குடின்னு சொல்றா அப்பறம் குடிகாதன்னு சொல்ற.. நல்லா தெளிவா குழப்புறான்னு பாக்குறீங்களா.. திரு திருன்னு முழிக்கறதை விட்டுட்டு கீழ எழுதியிருக்கறத படிங்க மொதல்ல.

தாகத்துக்கு மட்டும் தண்ணி இல்லங்க, தண்ணீர் பல நோயை குணப்படுத்தும் மருந்தும் கூட. ஆச்சரியமா இருக்கா? எனக்கும் தான்.நானும் கீழ கொடுத்திருப்பதை follow பண்ணி பாக்க போறேன். நீங்களும் செஞ்சு பாருங்க,அதுல சொன்ன மாதிரி இத try பண்ணி பாக்குறதால we are not going to lose anything.

படிங்க!

குடிங்க!


DRINK WATER ON EMPTY STOMACH

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases:Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders, ear nose and throat diseases.

METHOD OF TREATMENT

1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water

2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute

3. After 45 minutes you may eat and drink as normal.

4.. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours

5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.

The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases:
1. High Blood Pressure (30 days)
2. Gastric (10 days)
3. Diabetes (30 days)
4.. Constipation (10 days)
5. Cancer (180 days)
6. TB (90 days)
7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwards – daily.

This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times.
It is better if we continue this and make this procedure as a routine work in our life. Drink Water and Stay healthy and Active.


This makes sense .. The Chinese and Japanese drink hot tea with their meals ..not cold water. Maybe it is time we adopt their drinking habit while eating!!! Nothing to lose, everything to gain...

For those who like to drink cold water, this article is applicable to you.It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion.

Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine.Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal.

நன்றே செய்! அதை இன்றே செய்!

வரட்டா!