நா எழுதபோற விஷயங்களுக்கு ஆதரவு குடுக்கவும் ஆப்பு வைக்கவும் நிறைய பேரு காத்திருக்கீங்கன்னு தெரியுது. எதுவா இருந்தாலும் அதுல பாதி என் அண்ணனுக்கு போய் சேரும்கிற நிம்மதில ஆரம்பிக்கிறேன்..
ஒன்னும் இல்லீங்க... போன வாரம் ஷாலினி விழிப்புணர்வு வாரம்... நா வந்துட்டேன்.. இனி நீங்க தத்துவ மழையில நனைய போறீங்க என்ற மெசேஜ் உங்களுக்கு கெடச்சிருக்கும்.. இந்த வாரம் புற்றுநோய் (cancer) விழிப்புணர்வு வாரம் ...ஆமாங்க...
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்...
( நோய் என்ன ? நோய்க்கான காரணம் என்ன ? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.- கலைஞர் உரை)
வள்ளுவர் 2 அடில சொல்லிடாரு... நா இதையே தான் வழ வழா கொழ கொழா னு சொல்ல போறேன்.. கேளுங்க..
சந்தோஷமா எல்லாரும் இருக்கனும்னு யோசிக்கிறோம்...மனசளவில மட்டும் இருந்தா போதுமா????? இல்லீ

நம்ப நிறைய பேரு சாப்பிடுற விஷயத்துல அக்கறை கம்மியா காமிக்கிறோம். வேலை, படிப்பு, நண்பர்கள், அரட்டை, பொழுதுபோக்கு இப்படி நிறைய விஷயம் இருப்பதால சைடுல அது பாட்டுக்கு கிடைக்குறத சாப்பிட்டு காலத்த ஓட்டுறோம்..
இந்த பதிவை என் நெருங்கிய நண்பர்கள் பாத்தா ஷாலினியா அரோக்ய உணவு பத்தி பேசுறானு ஆச்சர்யபடுவாங்க..
அத ஏன் கேட்குறீங்க... ஒரு பழம் சாப்பிட்டுட்டு லஞ்ச் முடிஞ்சுதுனு நான் சொல்வேன்.. என் அண்ணன் cappucino குடிச்சுட்டு டின்னர் முடிஞ்சுதுனு சொல்வார்.. எல்லாம் ஒரே குட்டைல ஊரின மட்டை தான்.. :P
ஒழுங்க நல்லா உணவு சாப்பிடாததால வர நோய்கள் பல, அதுல தீர்க்க முடியாத நோய்கள்ல ஒன்னு கேன்சர்(cancer).

ஒரே ராத்திரில நம்ப பழக்கங்கள மாத்திக்க முடியாதுதான்.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணி சாப்டுற விஷயம்ல நல்ல பழக்கம் கொண்டு வரலாம்..
அடிப்படையா 5 சுலபமான குறிப்புகள் சொல்றேன்.. முடிஞ்ச வரை பின்பற்ற முயற்சியுங்க..
1. தினமும் நிறைய காய்கறி பழங்கள் சாப்பிடுங்க ( atleast 5 portions of fruits or vegetables a day)
2. நிறைய தண்ணீர் குடிங்க

3. தினமும் ஒரு அரைமணி நேரமாவது உடற்பயிற்சிக்கு உங்க நேரத்தை ஒதுகுங்க. சுலபான உடற்பயிற்சிகள் நிறைய இருக்கு (jogging, walking, swimming, cycling)
4. தினமும் மூன்று வேளையும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ சாப்பிடாதீங்க.
5. முடிஞ்ச வரை செயற்கை தின்பண்டங்களை தவிர்த்து இயற்கை உணவுகளை சாப்பிட்டு பழகுங்கள்(carrot sticks, raisins,strawberries,sunflower seeds,cucumber,corn,fruit salad)
மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்...
http://healthlink.mcw.edu/article/1031002628.html
இது organic உணவு பற்றிய இணைப்பு..
http://news.bbc.co.uk/1/hi/health/145347.stm
வல்லுனர்கள் இதை பற்றி என்ன சொல்கின்றார்கள்??
http://www.organicfoodee.com/sense/betterforyou.html
'Prevention is better than cure' but cure இல்லாத கேன்சர் மாறி வியாதிகளுக்கு 'Prevention is the only cure' .
நான் முன்ன சொன்ன மாதிரி சாக போற நாள் எப்போனு தெரிஞ்ச இப்படி வாழ மாட்டோம்.. அதே மாறி கேன்சர் வரும்பொழுது அதுவும் ஒழுங்கான உணவு சாப்பிடாததினாலன்னு தெரிஞ்சா நம்ப இப்படி சாப்டமாடோம்...
உணர்வோம்.. எல்லோரும் சந்தோஷமாக வாழ்வோம்!!
மீண்டும்,
ஷாலினி!!!