Tuesday, December 30, 2008

Goodbye 2008! :)


Hi Friends,

இதுல வர்ற கேரக்டர்ஸ் எதுக்கும் பேரு ஊரெல்லாம் சொல்லலை... ஆனா படிக்கறவங்களுக்கு தானா புரியும்.


If u know me and then u will know what I mean :)


2008 முழுவதும் பல மாற்றங்கள்...

ஏமாற்றம்,
தடுமாற்றம்,
மனமாற்றம்,
இடம் மாற்றம்.

புது நண்பர்கள்.. புதிரான வாழ்க்கை.
புரியாத நட்பு.. புரிந்ததால் பிரிந்த உறவு.

ரகசிய சிநேகிதம்.

குழப்பங்கள் எவ்வளவு இருந்ததோ அதே அளவு கும்மாலமும் :D

ஏகப்பட்ட புது அனுபவங்கள்.

கடவுளோட தரிசனத்துக்காக ஏங்கிட்டு இருக்கற பக்தர்கள் போலவே நானும் வாழ்க்கைல almost impossible- ஆன விஷயம் நடக்கனும்னு ஏங்கிட்டு இருந்தேன்..

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு அடிக்கடி என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன். ஒரு விஷயம் ஆசைப்பட்டு அது நடக்கனும்னா விடாம அடைய முயற்சி பண்ணிட்டே இருக்கனும். அப்போ தான் அது நமக்கு கிடைக்கும். Recently என் smart அண்ணன் recommend பண்ணி 'The secret' னு ஒரு புக் படிச்சேன். I take this moment to thank him for that.. because அவ்ளோ encouraging புக் அது. வாழ்க்கைல உனக்கு இது கிடைக்கனும்னு நீ நினைச்சா.. கண்டிப்பா அது உனக்கு கிடைக்கும்னு உசுப்பேத்தி விட்ட புக் :)

என் அனுபவம்ல சொல்றேன். I got what I want.. and I am confident that I will get if I want :)

என்ன விஷயம்.. எப்படிப் பட்ட விஷயம், நல்லதா, கெட்டதா இதெல்லாம் முக்கியம் இல்லை.. if u are happy and if by u being happy if others are happy and as long as it does not affect anyone personally...Just Go for it!!!

என் குருவான கோபிநாத் சச்சிதானந்த சுவாமிகள் அடிக்கடி சொல்றது தான் நானும் இங்க சொல்லிக்க விரும்பறேன்.. "போன பஸ்ஸுக்கு கை காமிச்சு பிரயோஜனம் இல்லை" :)

2008 உங்க எல்லாருக்கும் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை.. let 2009 be Yours!


If you want something you never had, do something you have never done...

Don't go the way life takes you.
Take the life the way you go .
And remember you are born to live and
not living because you are born.


Forgettable events beginning of the year நடந்திருந்தாலும்.. unforgettable events end of the year நடந்தது.. which means life goes on no matter what... life-ல எதுவுமே நிரந்தரம் இல்லை.. "இதுவும் கடந்து போகும்" என்ற இந்த 3 வார்த்தைய எப்பவும் நியாபகம் வெச்சிக்கோங்க...


Everything in life is temporary coz everything changes!!!! :)


Say a Big Goodbye to 2008 and Open Hearted da welcome 2009.. எதுவா இருந்தாலும் ஒரு கை பாத்துரலாம் :)

Happy New year to all!
Have a Great Year ahead!

உங்கள்,
ஷாலினி.

Monday, September 22, 2008

பஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 2


ஹாய் பிரண்ட்ஸ்..

சொந்த செலவுல சூனியம் னா என்னனு தெரியுமா? g3 தவிர வேற யாருக்கு எல்லாம் தெரியலையோ கைய தூக்குங்க.. 1..2... ம்ம்ம்.. இதை படிக்குற நாலு பேருல ரெண்டு பேருக்கு என்னனு தெரியாதுனால let me explain....

உங்களுக்கு சொந்தமான இந்த பொன்னான நேரத்தை என் மொக்கை போஸ்ட் படிக்க செலவு பண்றீங்க பாருங்க.. இது தான் அர்த்தம்..

p.s g3 மட்டும் ஏன் டீல்ல விட்டேன்னு அவ கிட்ட தயவு செஞ்சி கேட்டுராதீங்க..:P

பஞ்ச் பண்ணி பல மாசம் ஆச்சு.. டச் வுட்டு போனதால திஸ் டைம் என் பஞ்ச் கொஞ்சம் சாப்டா இருக்கும்.. அட்ஜஸ்ட் கரோ... ;)


here I Go... புலிக்கு பசிச்சாலும் புல்லை திங்காது.. சரி.. சரி.. இது தெரிஞ்ச விஷயம் தான், but புலிக்கு பசிச்சாலும் பேப்பரை திங்காது.. இது தெரியுமா? தெரியாதுல்ல.. இன்னொரு விஷயம்.. புலிக்கு பசிகாட்டியும் இந்த இரண்டையும் திங்காது.. பிகாஸ் புலி பசிகாம தின்னாது.. மண்டைக்குள்ள போச்சா சொன்னது?
நல்லது...



ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்து ஆகாது.. ரைட் தான்.. but ஊர் குருவி உயரமா பறக்காட்டியும் பருந்து ஆகாது.. note this point.. இன்னொரு விஷயம்.. ஊர் குருவி பறக்காட்டியும் பருந்து ஆக முடியாது.. because it is a ஊர் குருவி.. அதுக்காக city குருவி பறந்தா பருந்து ஆகுமான்னு எல்லாம் கேட்டா நான் டென்சன் ஆயிருவேன்.. இன்னொன்னு சொல்றேன்.. நல்லா கேட்டுகோங்க.. விஜய் குருவி ஆகலாம்.. ஆனா, குருவி விஜய் ஆகமுடியாது.. விளங்குச்சா? இல்லை இன்னும் விளக்கனுமா?


காற்றுள்ள போதே தூற்றிகொள்.. அது சரி.. கைல மேட்டர் வச்சிக்கிட்டு காத்துக்கு வெய்ட் பண்ணா வயசு ஆயிடும்.. இல்ல காத்து வரப்ப கைல மேட்டர் இல்லேனாலும் வெளங்கிடும் .. சோ, நான் என்ன சொல்ல வரேன்னா.. கைல மேட்டர் வந்த உடனே.. மொதல்ல போய் ஒரு fan வாங்கணும் (இல்லாதவங்களை சொன்னேன்) எப்போ எல்லாம் காத்து வேணுமோ அப்போ எல்லாம் ஆன் பண்ணுங்க.. சிம்பிள் மேட்டர்.. ஒகே.. அப்போ காத்து வாங்கும் போது கைல மேட்டர் இல்லேனா என்னே பன்றதுன்னு யோசிக்கலாம்.. அதுக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கேன்.. மேட்டரை ரெடி பண்ணுங்க.. அம்புட்டுதான்... :P


கந்தை ஆனாலும் கசக்கி கட்டு.. குட் பாயின்ட்.. பிகாஸ், அயர்ன் பண்ற வேலை மிச்சம்.... அதுக்காக இந்டர்வியூ போகும் போது , வேலைக்கு போகும் போது இந்த பாலிஸிய பாலோவ் பண்ணுவேன்னு அடம்பிடிக்க கூடாது.. அந்த மாதிரி நேரத்துல கந்தை கசக்கி இருந்தாலும் அயர்ன் பண்ணி கட்டுன்னு மாத்திக்கணும்.. ;)


காப்பி பேஸ்ட் ஷாலினி னு பேரு வந்துற கூடாதுனு சொந்தமா ஒரு பழமொழி.. எஸ்.. எஸ்.. சொந்த சரக்கு தான்..


கடலைய கம்மியா போடணும்..மொக்கைய முழுசா போடணும்..
பிகாஸ்.. கடலைய நிறைய போட்டா வயிறுக்கு நல்லது இல்ல.. மொக்கைய கம்மியா போட்டா வாழ்க்கைக்கு நல்லது இல்ல.. ச்சே.. ஷாலினி நீ எங்கயோ இருக்க வேண்டிய ஆளுன்னு வுச்சு கொட்றது எனக்கு கேக்குது.. இட்ஸ் ஓகே.. நோ ஹார்டு பீலிங்க்ஸ்..

சொன்ன எல்லா தத்துவத்தையும் தத்து எடுத்து பாலோவ் பண்ணுங்க.. ரொம்ப நல்லா உருப்பட்ருவீங்க.. சந்தோசமா இருங்க... லைப்பை என்ஜோய் பண்ணுங்க.. வரட்டா..

அய்யோ.. அய்யோ.. என்ன இது, என்னவோ என்கிட்டே கடன் வாங்கின மாரி வட்டியும் முதலுமா ரியல் பஞ்சை போட்டி போட்டு திருப்பி தரீங்க.. பன்சர் ஆயிருவேன் போல இருக்கே..


This is my 13th post! I specially dedicate this to my Guru Gops! :)

நா எஸ்கேப் டா சாமி..

Monday, September 01, 2008

பூவுக்கு பிறந்த நாள் :)

Hi Friends, எப்படி இருக்கீங்க? இதயம் பேசுகிறேன்னு சொல்லிட்டு இப்படி heart beat நின்ன மாறி silent ஆகராலே னு யாரும் யோசிச்சிருக்க மாட்டீங்க.. இருந்தாலும் reason சொல்லாட்டி என் தலை வெடிச்சுரும்.....

தலைவர் அன்னிக்கு சொன்ன மாறி.. நேற்று போல் இன்று இல்லை.. இன்று போல் நாளை இல்லை.. வேறே ஒன்னும் நான் சொல்றதுக்கு இல்லை.. :P


இன்னைக்கு என்னோட best friend பிறந்த நாள்... thought of sharing the peelings I have for her...so, அதோட விளைவு தான் நீங்க இப்போ படிக்க (படிச்சு முடிச்சுட்டு commentalaye என்ன அடிக்க) போறது.... :P


*cough* *cough* பொய் சொல்றவங்களுக்கு தண்ணி கூட கிடைக்காதுனு சொல்வாங்க....mmm..சரி, anything for my G3 ;)

Here I go....

என்றென்றும் புன்னகை முகத்தோடு...



எதையும் தாங்கும் இதயத்தோடு...







கேடியானாலும் innocent லூக்கோடு...









'வரும்போது பாத்துக்கலாம்' policyodu...







இவ formல இருந்தா மொக்கைகள் போடுவா சக்கைபோடு..











இவ கூட இருக்கும் ஒவ்வொரு நொடியும் கழியும் சந்தோஷத்தோடு..







இவள் பேச்சு தேன் சுரக்கும் கூடு..






தினமும் என் நாள் துவங்கும் இவள் GM sms sodu..







இவ தான் நம்ப ஆளு..

..G3 என்ற பெயரோடு எல்லோர் மனதிலும் அன்போடு வளம் வரும் ஒரு அழகிய பூக்காடு.










அப்படி போடு.. இப்படி போடு..g3 பிறந்த நாளான இன்று..
சத்தமா ஒரு 'ஓ' போடு !

Many More Happy Returns of the Day my chweeeeeeeeeet girl. :)


என்னடி கன்னத்துல கைய வச்சுட்டு லுக்கு விடுற..இதுக்கெல்லாம் வேர ஆள பாரு ;) உ....உ...ஊது மா என் 3gms தங்கமே! :)




wait a Jecondu...... make a wish and blow the candles... :)




கொக்கா!!!!!!! மக்க!!!!! wisho-o-wishu போல ;)



g3 cake-க ஊதியே காலி பண்றதுக்கு முன்னாடி யாரவது அவள அமுக்குங்க.. நம்ப cake-க அமுக்கலாம் :P



Have a Fabulous day! May ur wishes come true in the coming years and have a great year ahead! :)




வாழ்வின் திசை மாறும், பாதைகளும் மாறும்.
சொந்தம் நூறு வரும், வந்து வந்து போகும்.
என்றும் என்றென்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே......... (copy pasted from some song) Dedicated to My G3...:)







Shalini...








Tuesday, May 27, 2008

இவர் தான் அந்த அவர்

சொல்ல போறேன்.. சொல்லிடறேன்.... சொல்லிட்டேன்.. :P

இது இவரோட சொந்த பஞ்ச் டயலாக் :P

நடிப்புல சிவாஜி..
படிப்புல ராஜாஜி..
சண்டைல நேதாஜி..
பாசத்துல மாதாஜி..
கண்டிப்புல பிதாஜி..
குறும்புல ஜுமாஞ்சி.. :P (இது மட்டும் என்னோட எக்ஸ்ட்ரா பிட்டிங்)
இவரு தான் நம்ம இராகவன் ஜி!!

மலரில் வாசனை போகலாம்
நிலவில் குளுமை போகலாம்
ஆனா உங்க மேல நாங்க வைச்சிருக்கும் பாசம் போகவே போகாது!
சூரியன் மேற்கே வரலாம்
சென்னைல ஸ்நோ வரலாம்
ஆனா நீங்க எங்க மேல வைச்சிருக்கிற நேசம் மாதிரி வரவே வராது! :P

இதுல மேல rhyming க kavidhai என்ற பேருல போட்டா எது வருதோ இல்லையோ மக்களுக்கு என் மெல கொல வெறி வரும்.. சோ வாழ்த்து சொல்லி me the escapeuuu ;)

Happy Birthday anna :)
Murugan arulaala enaikum neenga santhoshama vaazhanum nu ellar saarbulayum vaazhthuren :)
Enjoy and Keep Smiling :)
Shalini.

இந்த நாள் இனிய நாள்

வணக்கம்!!

ஆமாங்க இந்த நாள் இனிய நாள். because இன்னைக்கு ஒரு சிறந்த மனிதரின் பிறந்த நாள் :) என்ன பேந்த பேந்த முழிக்கறீங்க? அந்த great personality யாருன்னு கண்டு பிடிக்க தான் இந்த பதிவு போட்டிருக்கேன். It is a great pleasure and honor for me to put this post for him on his birthday...:)

சரி ரொம்ப பீட்டர் விடாம மேட்டருக்கு வறேன்.. இதுல நிறைய சிறப்புகள் இருக்கு. சும்மா போஸ்ட் படிச்சிட்டு as usual கும்மி அடிச்சிட்டு போகாம.. கொஞ்சம் மூளைக்கும் வேலை. இன்னொன்னு first யாரு இவர கண்டு பிடிச்சு சொல்றாங்களோ அவங்களுக்கு இதுல எத்தனை கமெண்ட்ஸ் வருதோ அத்தனை rupees நான்ன் அவிங்களுக்கு அனுப்பி அவங்க கையாலயே அவங்களுக்கூ தெரிந்த orphanage school க்கு donate பன்ற பாக்கியம் கிடைக்கும் :) this is my gift to this sweet person on earth :)



நல்லா உத்து பாருங்க. இப்படி ஒரு கூர்மையான பார்வையும்.. அழகான சிரிப்பும்.. பால் வடியும் முகமும் வேற யாருக்கு இருக்க முடியும்...:)

anyways, puzzle னா க்ளூ இல்லாமலா.. கண்டிப்பா 10 clues கொடுக்கிறேன்.. என்ன இதுல வித்தியாசம் னா clues தான் இதுல puzzle :P

so எல்லாரும் ready ya...hands on the mouse..get set...go... :P

1. சிறந்த மனிதர்னு நான் சொன்ன்னதும் உடனே நேரு.. காந்தி ரேஞ்சுக்கு யோசிக்காம புத்தர்.. விவேக்கானந்தர் ரேஞ்சுக்கு யோசிக்கனும் :P இது தான் first clue.

2. இவரு விடுற நக்கலு... தண்ணி குடிச்சாலும் அடிச்சாலும் நிக்காம வரும் விக்கலு :P (jecondu clue)

3.he is very sweet but திகட்டாது... he is sometimes strict but வெறுக்காது.. :)

4. எனக்கு இந்த மாதிரி ஒரு அண்ணன் இந்த ஜென்மத்தில இல்லையேனு வேதனை படும் அதே சமயம்.. அடுத்த ஜென்மத்துல இவரு தான் என் அண்ணனா வரணும்னு வேண்டும் இவரை நல்லா தெரிந்த மனங்கள்.

5.லொள்ளுல இவரை அடிக்க இது வரை யாரும் பொறக்கல..at the same time ஜொள்ளுல இவரை அடிக்காத ஆளே இல்லை! ..because இவர் ஜொள்ளு விட தெரியாத அப்பாவி.

6.தன்னடக்கத்த அடக்கம் எல்லாம் பன்னாம அடக்கமா வெச்சு இருப்பவர்... அதே போல தன்னம்பிக்கையோட இடட்து கண்ணாவும்.. தன்மானத்த வலது கண்ணாவும் நினைக்கிற ஒரு தங்க மனிதர்.

7.இவரோட எழுத்தாற்றல் பத்தி சொல்ல எனக்கு வயசும் பத்தாது.. தமிழ்ல இருக்கும் வார்த்தையும் பத்தாது.. இவரு யாருன்னு தெரிஞ்சதும் உங்களுக்கே புரியும்...

8. இவரு கைல வேலு ஒன்னு தான் மிஸ்ஸிங்.. அது இருந்தா இவரு பக்கா சாட்சாத் அந்த முருக பெருமானே தான் minus வள்ளி தேவயானி :P (still eligible but not easily available batchelor)

9.இவரும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. ரெண்டுக்குள்ள ரெண்டு.. மூனுக்குள்ள ஆயா..இட்லிக்கு தருவாங்க பாயா:P

10.last but not the least இவருக்கு பிடிச்ச நபர்கள் லிஸ்ட் சொல்றேன்.. அவருக்கு most fav persons சொன்னா டக்குனு கண்டு பிடிச்சிடுவீங்க....so அதுனால அதெல்லாம் நான் விட்டுட்டு கஷ்டமான கஷ்டமான clue தரேன் பேர்வழினு பேரு எடுக்க .. இதோ அந்த list...
1.Bernad Knight
2.Rudyard Kipling
3.J.R.R.Tolkien
4.J.K.Rowling
5.Anne Rice
6.Brandan Frazer
7.Sandra Bullock
8. Katherine Heigl
9.James Marsden
10.கண்டிப்பா சரியான கடுப்புல இருப்பீங்க.. இதோ ஈஸி க்ளூ.....எத்தனை பேரு லிஸ்ட்ல இருந்தாலும் இவரு ஒருத்தர் இல்லைனா வாழ்க்கையே இல்லைனு நம்புறவர்....அவர் தான் என் ஆருயிர் நண்பரோட தம்பி முருகர்!!!! :)

இவரை இது வரை நீங்க கண்டுபிடிக்காட்டி நீங்க life ல ஒரு great person மீட் பன்ற சான்ஸ் கைக்கு எட்டின தூரத்துல இருக்குனு நினைச்சு இவரு யாருனு தெரிஞ்சதும் போய் முதல்ல 'ஹாய்' சொல்லுங்க.. மறக்காம birthday wish பன்னுங்க:)

இன்னும் சில மணி நேரங்களில் இவ்வளவு நற்குணங்கள் கொண்ட அந்த நல்ல மனிதர் யாருனு போட்டோ போட்டு சொல்லிடறேன்.. அதுவரை keep guessing :)

வரட்டா ;)

உங்கள் ஷாலினி

Saturday, May 24, 2008

யாரிந்த மத்தாப்பு?


யாரிந்த பொண்ணு
அழகான கண்ணு
நம்ம ஊர் மண்ணு
இப்ப தினமும் தின்னுது பன்னு!!!!







அட... அட...... யாருக்கு பிறந்தநாள்! இவங்க பேரை சொன்ன உடனே மனசுக்குள்ள மத்தாப்பு வெடிக்கும்! (மத்தாப்பு என்ன சரவெடியா வெடிக்கறதுக்கு அப்படினு எல்லாம் கேட்காதீங்க ப்ளீஸ்!!!)

ஆமா! நம்ம மனசுக்குள் மத்தாப்பு திவ்யா தான்! May 24 பிறந்த நாள் கொண்டாடும் இவங்களை நாம எல்லாரும் வாழ்த்தலாம் வாங்க!

Friday, May 16, 2008

பஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 1





Hi friends, எப்படி இருக்கீங்க? என்ன ஆச்சு? சில பேரு மூஞ்சு உம்முனு இருக்கு (சாலமன் பாப்பையா மாதிரி படிக்கனும் இதை) அட நம்ம G3 ய பாருங்க.. எப்படி சிரிச்ச முகத்தோட படிக்கறாங்க.. சோக கவிதையா இருக்கட்டும், அறுவை ஜோக்கா இருக்கட்டும்.. எதுனாலும் மலர்ந்த தாமரை முகத்தோட படிப்பாங்க.. அவங்களை பார்த்து கத்துக்கோங்கய்யா:P

ஊர்க்கு உபதேசம் பன்னுறதுனா எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. அதுவும் சிக்கல் இருக்கிறவங்களுக்கு உபதேசம் பன்றதுனா சிக்கன் பிரியாணி மாதிரி..:P அவ்ளோ பிடிக்கும்...

சரி நேரா மேட்டர்க்கு வருவோம்... எதுனாலும் வேஸ்ட் பன்னலாம். ஆனா நேரம் மட்டும் வேஸ்ட் பன்னா திரும்ப அத சம்பாதிக்க முடியாது.. அதுனால இதோ short and sweet டா இன்னொரு பதிவு :)


1.வராத பஸ்ஸுக்கு வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
வர பஸ்ஸுக்கு வராத டைம்ல வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
வர பஸ்ஸுக்கு வருகிற டைம்ல வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.

ஏன்னா.. என்னைக்கு பஸ் கரெக்ட் டைம்க்கு வந்து இருக்கு! :P


2.தலையில இருந்து முடி விழுந்தா வழுக்கை.
தூக்கம் வந்து விழுந்தா படுக்கை.
விநாயகர் மூக்கு பேரு தும்பிக்கை.
வாழ்க்கையில எப்பவும் வேணும் நம்பிக்கை :)

3.குப்பைய கூட்டினா பெருக்கல்.
உணவை கூட்டினா உடம்பு பெறுத்தல்.
வாழ்க்கையில கூட்ட கூடாத விஷயம் மத்தவங்க வெறுத்தல்.
ஆனா கூட்டிகிட்டே போக வேண்டிய விஷயம் சிரித்தல்!

4.தலைக்கு மேல இருக்கும் மூன்று விஷயம் எண்ண முடியாது..ஒன்னு நட்சத்திரம்.. இன்னொன்னு தலை முடி..(வழுக்கையா இருந்தாலும் :P) இன்னொன்னு தலை எழுத்து!!!

5.அதே போல மூன்று விஷயம் உணர மட்டும் தான் முடியும்.. பார்க்க முடியாது..
ஒன்னு கடவுள்.. இன்னொன்னு வலி... இன்னொன்னு காதல்..

கடவுளை உணராதவன் நாத்திகன்
வலியை உணராதவன் மாவீரன் (அட.. தலைவர் சொல்லி இருக்காருல... மனுஷனுக்கு தான் வலிக்கும்.. மாவீரனுக்கு வலிக்கவே வலிக்காதுனு!)
காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன் :P

அப்படினு சொல்லி... இந்த வார உரையாடலை இதோட நிறுத்திக்கிறேன்... இல்லாட்டி கல் மழை பெய்து அத வைச்சு வீடுகட்ட வேண்டியதா போயிடும் :P

வரட்டா! keep smiling and be happy :)

அன்றும் இன்றும் என்றும்,

உங்கள் ஷாலினி :)

Sunday, April 20, 2008

கிறுக்கியின் கிறுக்கல்...

மறக்க நினைத்தால் மலருகின்றது..
வெறுக்க நினைத்தால் வளர்கின்றது..

அழிக்க நினைத்தால் அணைக்கின்றது..
முறிக்க நினைத்தால் முளைக்கின்றது..

முடியவில்லையடா....



உன்னை விட்டு நான் விலகிவிடும் முன், நான் என்னை விட்டும் விலகிட வேண்டும்..

முதன் முறையாக மனம்
விடியா இரவை வேண்டுகின்றது!
விடை இல்லா கேள்வியைக் கேட்கின்றது!

நிலவைக் கண்டால் என் நினைவு உனக்கு வருவது போல்
நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் உன் நினைவு எனக்கு!

விலகவா?விட்டுவிடவா?

விடை சொல்வாயா?விடை பெறுவாயா?



ஒரே feelings of london na இருக்கா? ஹிஹி.. லவ் நா என்னன்னு தெரியாமவே லவ் பத்தி கிருக்கற ஒரே கிறுக்கி நானா தான் இருப்பேன் :P
படிச்சுட்டு நீங்க எந்த விபரீத முடிவுக்கும் வர கூடாது.. நோ நோ...நா அப்பாவி. தெரியாம தெரியாதத பத்தி எழுதிட்டேன்.. ஷாலு பாவம் ல :)


forgive and forget!!! :)


ஷாலினி.

Friday, March 28, 2008

யாரது போறது?

அழகான தோற்றம்.
அமைதியான பேச்சு... *cough* *cough* eggjuice மீ ஹிஹி

Ok continue….

மொக்கையில் மன்னன்..
கடலையில் கண்ணன்..






பிகரா எறும்பு போனாலும் விடமாட்டாரு..
உடனே அதை படமாக்குவாரு..



ஆடினா டி.ஆர்..
நடந்தா NTR..
பாடினா ARR ..
எழுதினா பாரதியார் *cough**cough*




சே சே சே இந்த இருமல் தொல்லை வேற... உடம்பு சரி இல்லையா ஷாலுனு தான இப்போ கேட்டீங்க... இந்த இருமலுக்கு பின்னாடி ஒரு சோகக் கதையே இருக்கு... உடனே வாழ்வே மாயம் ரேஞ்சுக்கு கற்பனை பன்னிடாதீங்க... நானே சொல்லிடறேன்... என் சொந்த சோக கதைய..

Long long ago….not so very long ago…கவிதை எழுத கற்பனை செய்ய ஒரு மூங்கில் காட்டுகுள்ள நுழைந்தேன்... அப்போ தூரத்தில இருந்து ஓம்ம்ம்ம்.... ஓம்ம்ம்ம் னு ஒரு கனீர் க்குரல் கேட்டுச்சு... கிட்ட போக போக காஅட்து கிழியற மாதிரி ஆயிடுச்சு... காது வலிச்சுதால ஆஹ்ஹ்ஹ் னு கத்திட்டே கண்ணை மூடிட்டு காத பொத்தினேன்... அப்போ பார்த்து ஒரு குட்டி பூச்சி என் வாய்க்குள்ள போக நான் லொக்கு லொக்குனு இருமினேன்... அம்புட்டு தான்... ஒரே நிசப்தம்.... என்னனு பார்த்தா எதிர்ல முனிவர் வேஷம் போட்டு ஒருத்தர் நின்னுகிட்டு இருந்தாரு... வேஷம் காமடியா இருந்ததால கெக்க பெக்கனு சிரிச்சேன்.. உடனே அவர் கையில வைத்திருந்த அந்த கம்ப என் முன்னாடி காமிச்சு.. அடியே சண்டாளி என் தவத்தை கலைத்து விட்டாயே, இதோ உனக்கு சாபம் இடுகிறேன்னு தூய தமிழ்ல கதைச்சாரு. நான் சும்ம விடுவேனா... 'ஹலோ என்ன சவுண்ட் ஓவரா இருக்கு.. மூங்கில் காட்டுக்குள்ள முனிவர் வேஷம் போட்டுட்டு யார் யாருக்கு சாபம் விடுவது? இந்த ரீல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.. என் காது கிழிய வைச்சுட்டு வாய் கிழிய பேசுற பேச்ச பாரு' அப்படினு ரொம்ப சத்தமா சொன்னேன்..

அடுத்த வினாடி ஒரே புகை அவரை சுத்தி.. என் பேச்சு திறமையில அவரு வயிரு எரிந்து போச்சோனு நினைச்சேன்.. இல்லைங்கோ.. அவரு நிஜமாவே முனிவர் போல.. இவர் தவத்த கலைக்க எதிராளிகள் என்னை அனுப்பினதா தப்பா நினைச்சுட்டு 'பொய் சொல்லாதே இனிமே நீ பொய் சொன்னா உடனே உனக்கு என் தவத்தை கலைத்த அதே இருமல் வரும்'னு சாபம் விட்டுடார் :( sorrynga…so அப்போ அப்போ இருமல் நடுவில வரலாம் கண்டுகாதீங்க ப்ளீஸ் ; )

அட, let us continue....

ம்ம் எழுதின பா... வேணா.. அத விட்டுடுவோம்.. திரும்பி இருமல் வரும் :P

இவர் தாங்க நம்ம CVRரு... ஹிஹி



ஒன்னு சொல்ல விட்டுட்டேன் நடுவில..

இவரு பேசினா அடிக்காது போரு
இவரோட ஸ்கரேப் எண்ணிகை ஆறாயிரத்தி ஐநூறு ;)

4 நாளுல Ann Arbor விட்டு கிளம்பி போறாரு சென்னைக்கு
அதுனால நல்லப்படியா வழிஅனுப்பி வைப்போம் வாழ்த்துக்கள் சொல்லி இன்பமான வாழ்க்கைக்கு..

Safe Journey and Happy Life in Chennai CVR!!
Good Luck for you bright and colourful Future!!

God Bless U!


உங்கள் சேவை பதிவுலக மக்களுக்கு கண்டிப்பா தேவை. so dont stop writing.


Bye , Take Care and Keep in Touch!! :)

Thursday, March 13, 2008

லக்கி நம்(ண்)பர் 13!!

வணக்கம் வந்தனம் என் நெற்றியில இருக்கு சந்தனம்..
நான் சொல்ல போறது fulla சொல்லி முடிக்கிறவரைக்கும் எல்லாரும் சைலண்ட்டா குந்தனும்.. :)

என்ன சொன்ன உடனே ஏதோ பந்தி போட்ட மாதிரி உட்கார்ந்துடீங்களா?? :P அது சரி... வந்தாச்சு.. உட்கார்ந்தாச்சு.. விஷயத்துக்கு வறேன்.. Gops.. gops..னு (இரெண்டு பேர் இல்ல) ஒருத்தர் இருக்காராமே.. கேள்வி பட்டேன். அவரை பத்தி கொஞ்சம் உங்க கிட்ட விசாரிக்கனும்னு தான் கூப்ப்பிட்டேன். ஊருக்குள்ள யார்ட்டா கேட்டாலும் இப்படி சொல்லறாங்க..

இவரு பேசினா நான்-ஸ்டாப் FM..
இவரு தான் எங்க ஊர் நெக்ஸ்ட் PM.



இவரு முகத்துல முழிச்சா யோகம் வரும்...
வெயில் அடிச்சா ஆட்டொமேடிக்கா தாகம் வரும்.



இவர் கார் ஆகும் அப்பப்ப பஞ்சர்...
இவர் பேசினா நம்ம காதுக்கு வேணும் டிஞ்சர்.

இவரோட லக்கி நம்பர் பதிமூனு..
மேக்கு அடுத்த மாசம் ஜூனு.

ஐயோ ஐயோ. என்ன எங்க அடிக்க வறீங்க.. இதெல்லாம் ஊருக்குள்ள சொல்லறாங்க... யாரு அது..உங்க கூட்டத்துல ஒருத்தர் என்னை பலமா குத்தினது.. அதுவும் இது கோப்ஸ் குத்துனு சொல்லிட்டு குத்தினமாதிரி காதுல விழுந்தது..

ஆகா ஆகா.. வந்துடான்யா வந்துடான்யா.. இவரு தான் கோப்ஸ்ஆ?

வணக்கம் தலைவா..
எங்க போறீங்க விரைவா..
கேக்க வெட்டுங்க சம அளவா..
அத எடுத்து போய் எல்லாரும் சாப்பிடுங்க மன நிறைவா..



ஹிஹி..
உங்கள் மொக்கை சேவை உங்க அன்பு பதிவுலக மக்களுக்கு கண்டிப்பா தேவை..
so இன்று போல் என்றும் ROTFL ஆ உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கனும்னு இறைவனை வேண்டிக்கிறோம்..
எல்லார் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Tomorrow never dies and ur smile never lies..

சாப்பாடு தான் ஆச்சுல... போய் வேலைய பாருங்கப்பா!


ஆஹா.. யாரோ பாசக்கார பய சாப்பிட்டு மீதிய வைச்சுட்டு போய் இருக்கான்..
நமக்குனு வைச்சுட்டு போனானா, இல்லை அவனுக்கு அவசரம்பு வைச்சுட்டு ஓடிட்டானா??

oops.. இந்த கும்மாளத்துல நா oppice-sa மறந்துட்டேன்.. டாட்டா..catch u later! Byeeee :)

Sunday, March 02, 2008

படிங்க! குடிங்க! ;)

வந்துட்டேன்'ல..


அட வந்தா, பந்தா விட்டா, ரெண்டு போஸ்ட் போட்டா அப்பறம் ஆளையே காணுமேனு பாத்தீங்களா?? தெரியும் , பத்துல நாலு பேராவது என்னை மிஸ் பண்ணி இருப்பீங்க..ஹிஹி. சரி, emotional ஆகாதீங்க, அதான் வந்துட்டேன் ல.

எல்லாரும் பயனுள்ள பதிவா போடுங்கன்னு ஒரு நிபந்தனை விட்டதால என்னோட ஈமெயில்கு வந்த ஒரு உபயோகமான விஷயத்த உங்க கிட்ட பகிர்ந்துக்கலாம்னு பாத்தேன்.
முன்னுரை மட்டும் நான் சொல்றேன் மத்ததெல்லாம் தெளிவா அவங்களே சொல்லி இருக்காங்க.



எத்தன பேரு இங்க காலைல எழுந்ததும் atleast ஒரு கிளாஸ் தண்ணி அடிக்கிறீங்க sorry குடிக்கிறீங்க?(slip of the finger ra) இந்தியாவுல இருப்பவங்க வெயில் தாங்காம நிறைய தண்ணி குடிப்பீங்க ஆனா குளிர் தேசத்துல இருக்கற சில நண்பர்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறது இல்ல.. அதுல முதல் எடுத்துக்காட்டு நான் தான்.. 2-3 days கூட தண்ணியே குடிக்காம இருந்திருக்கேன்.. அப்பறம் ஞாபகம் வந்ததும் தண்ணியே இனி பாக்கவே முடியாதுங்கற ரேஞ்சுக்கு குடிப்பேன். இது மிகவும் தவறு.

அதுக்காக சும்மா ஞாபகம் வரும்போதெல்லாம் தண்ணிய குடிக்குறதும் தவறு. என்ன இந்த பொண்ணு குடின்னு சொல்றா அப்பறம் குடிகாதன்னு சொல்ற.. நல்லா தெளிவா குழப்புறான்னு பாக்குறீங்களா.. திரு திருன்னு முழிக்கறதை விட்டுட்டு கீழ எழுதியிருக்கறத படிங்க மொதல்ல.

தாகத்துக்கு மட்டும் தண்ணி இல்லங்க, தண்ணீர் பல நோயை குணப்படுத்தும் மருந்தும் கூட. ஆச்சரியமா இருக்கா? எனக்கும் தான்.நானும் கீழ கொடுத்திருப்பதை follow பண்ணி பாக்க போறேன். நீங்களும் செஞ்சு பாருங்க,அதுல சொன்ன மாதிரி இத try பண்ணி பாக்குறதால we are not going to lose anything.

படிங்க!

குடிங்க!


DRINK WATER ON EMPTY STOMACH

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases:Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders, ear nose and throat diseases.

METHOD OF TREATMENT

1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water

2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute

3. After 45 minutes you may eat and drink as normal.

4.. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours

5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.

The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases:
1. High Blood Pressure (30 days)
2. Gastric (10 days)
3. Diabetes (30 days)
4.. Constipation (10 days)
5. Cancer (180 days)
6. TB (90 days)
7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwards – daily.

This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times.
It is better if we continue this and make this procedure as a routine work in our life. Drink Water and Stay healthy and Active.


This makes sense .. The Chinese and Japanese drink hot tea with their meals ..not cold water. Maybe it is time we adopt their drinking habit while eating!!! Nothing to lose, everything to gain...

For those who like to drink cold water, this article is applicable to you.It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion.

Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine.Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal.

நன்றே செய்! அதை இன்றே செய்!

வரட்டா!

Sunday, February 03, 2008

காதல் சுகமானது ???


விரிக்காத வலையில் சிக்கியது நம் இதயம்...
காதலுக்கு கண்ணில்லை,
நம்புவோம்!

நம் நினைவுகள் அழியாச்சுவடுகளாய் இதயங்களில்...
காதலின் காயம்,
வருடுவோம்!

எதையும் தாங்கும் இதயம், நம் பிரிவை தவிர...
காதலின் வலி,
உணர்வோம்!

கைகோர்த்து நடக்கும் பாதையில் தடைக்கற்கள் என்னும் எதிரிகள்...
காதலில் போர்,
வென்றுவிடுவோம்!

திருமணம் ஒரு ஆயுள்தண்டனை...
காதலும் குற்றமாம்,
நாமே சரணடைவோம் !

Sunday, January 27, 2008

என்ன சாப்பிடீங்க ?

வணக்கம்! வந்தனம்! நமஷ்கார்!
நா எழுதபோற விஷயங்களுக்கு ஆதரவு குடுக்கவும் ஆப்பு வைக்கவும் நிறைய பேரு காத்திருக்கீங்கன்னு தெரியுது. எதுவா இருந்தாலும் அதுல பாதி என் அண்ணனுக்கு போய் சேரும்கிற நிம்மதில ஆரம்பிக்கிறேன்..

ஒன்னும் இல்லீங்க... போன வாரம் ஷாலினி விழிப்புணர்வு வாரம்... நா வந்துட்டேன்.. இனி நீங்க தத்துவ மழையில நனைய போறீங்க என்ற மெசேஜ் உங்களுக்கு கெடச்சிருக்கும்.. இந்த வாரம் புற்றுநோய் (cancer) விழிப்புணர்வு வாரம் ...ஆமாங்க...


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்...

( நோய் என்ன ? நோய்க்கான காரணம் என்ன ? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.- கலைஞர் உரை)
வள்ளுவர் 2 அடில சொல்லிடாரு... நா இதையே தான் வழ வழா கொழ கொழா னு சொல்ல போறேன்.. கேளுங்க..


சந்தோஷமா எல்லாரும் இருக்கனும்னு யோசிக்கிறோம்...மனசளவில மட்டும் இருந்தா போதுமா????? இல்லீங்க நம்ப உடம்பு அரோக்யமா இருந்தா தான் மனசும் அரோக்யமா சந்தோஷமா இருக்க முடியும்.. இது மறுக்க முடியாத உண்மை.

நம்ப நிறைய பேரு சாப்பிடுற விஷயத்துல அக்கறை கம்மியா காமிக்கிறோம். வேலை, படிப்பு, நண்பர்கள், அரட்டை, பொழுதுபோக்கு இப்படி நிறைய விஷயம் இருப்பதால சைடுல அது பாட்டுக்கு கிடைக்குறத சாப்பிட்டு காலத்த ஓட்டுறோம்..

இந்த பதிவை என் நெருங்கிய நண்பர்கள் பாத்தா ஷாலினியா அரோக்ய உணவு பத்தி பேசுறானு ஆச்சர்யபடுவாங்க..

அத ஏன் கேட்குறீங்க... ஒரு பழம் சாப்பிட்டுட்டு லஞ்ச் முடிஞ்சுதுனு நான் சொல்வேன்.. என் அண்ணன் cappucino குடிச்சுட்டு டின்னர் முடிஞ்சுதுனு சொல்வார்.. எல்லாம் ஒரே குட்டைல ஊரின மட்டை தான்.. :P

ஒழுங்க நல்லா உணவு சாப்பிடாததால வர நோய்கள் பல, அதுல தீர்க்க முடியாத நோய்கள்ல ஒன்னு கேன்சர்(cancer).

எனக்கு தெரிஞ்ச சில பேரு இது மாதிரி பாதிக்க பட்டதால தான் இத சொல்லலாம்னு பாத்தேன்..
ஒரே ராத்திரில நம்ப பழக்கங்கள மாத்திக்க முடியாதுதான்.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணி சாப்டுற விஷயம்ல நல்ல பழக்கம் கொண்டு வரலாம்..


அடிப்படையா 5 சுலபமான குறிப்புகள் சொல்றேன்.. முடிஞ்ச வரை பின்பற்ற முயற்சியுங்க..



1. தினமும் நிறைய காய்கறி பழங்கள் சாப்பிடுங்க ( atleast 5 portions of fruits or vegetables a day)

2. நிறைய தண்ணீர் குடிங்க, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் அல்லது சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள் (artificial fizzy and carbonated drinks) தவிர்க்க முயற்சி பண்ணுங்க. பழமெல்லாம் சாறு பண்ணி குடிப்பதை விட அப்படியே சாப்பிடுறது தான் நல்லது. அப்போ தான் vitamins முழுமையா கெடைக்கும்.

3. தினமும் ஒரு அரைமணி நேரமாவது உடற்பயிற்சிக்கு உங்க நேரத்தை ஒதுகுங்க. சுலபான உடற்பயிற்சிகள் நிறைய இருக்கு (jogging, walking, swimming, cycling)

4. தினமும் மூன்று வேளையும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ சாப்பிடாதீங்க.

5. முடிஞ்ச வரை செயற்கை தின்பண்டங்களை தவிர்த்து இயற்கை உணவுகளை சாப்பிட்டு பழகுங்கள்(carrot sticks, raisins,strawberries,sunflower seeds,cucumber,corn,fruit salad)

மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்...

http://healthlink.mcw.edu/article/1031002628.html


இது organic உணவு பற்றிய இணைப்பு..
http://news.bbc.co.uk/1/hi/health/145347.stm

வல்லுனர்கள் இதை பற்றி என்ன சொல்கின்றார்கள்??
http://www.organicfoodee.com/sense/betterforyou.html

'Prevention is better than cure' but cure இல்லாத கேன்சர் மாறி வியாதிகளுக்கு 'Prevention is the only cure' .

நான் முன்ன சொன்ன மாதிரி சாக போற நாள் எப்போனு தெரிஞ்ச இப்படி வாழ மாட்டோம்.. அதே மாறி கேன்சர் வரும்பொழுது அதுவும் ஒழுங்கான உணவு சாப்பிடாததினாலன்னு தெரிஞ்சா நம்ப இப்படி சாப்டமாடோம்...

உணர்வோம்.. எல்லோரும் சந்தோஷமாக வாழ்வோம்!!

மீண்டும்,
ஷாலினி!!!

Saturday, January 19, 2008

முதல் முறையாக!!



என் இனிய தமிழ் ப்ளாக்(பதிவுலக) மக்களே, உங்கள் பாசத்தில் உருகவரும் ஷாலினியின் இதயம் பேசுகிறேன்.. இந்த ப்ளாக்(பதிவு) ஏன் ஆரம்பிச்சேன், எதுக்கு ஆரம்பிச்சேன்னு எல்லாம் எனக்கு தெரியாது. தோனுச்சு ஆரம்பிச்சிட்டேன். அவ்ளோ தான்.. இது தான் நான்.

பிடிக்கிற விஷயம்னா... செய்வேன். அதுனால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லனா.... எவ்வளவு நாள் வாழ போறோம்னு யாருக்கு தெரியும். தெரிஞ்சா இப்படி வாழ்வோமா? சரி, விட்டா நான் நிறைய தத்துவம் சொல்லிட்டே இருப்பேன். இப்போ தான அறிமுகம் ஆகி இருக்கு...

என்னை பத்தி போக போக புரிந்துகொள்வீர்கள், ஹிஹி.